கலிகால...
கண்களை நன்றாக
மூடிக்கொள்
அநியாயத்தை பார்க்காமல்...
செவிகளை அடைத்துவிடு
திட்டும் வார்த்தைகளை கேட்காமல்....
வாயை எப்போதும்
பூட்டியே வைத்துக்கொள்...
அநீதிக்குப் பதில் சொல்லாமல்..
இப்போது உன் வாழ்வு இனிக்கும்
கண் இருந்தும் காணாமல்
காதிருந்தும் கேட்காமல்...
வாய் இருந்தும் பேசாமல்....
கலிகால வாழ்வு
இப்படித்தான் போக வேண்டும் என்பது
எழுதப்படாத சட்டம்....