(4) தந்திர காட்டில் நான் ( 1.திக்குதெரியாத காட்டினிலே)

----------------(தொடர்ச்சி) ---------------------

'ஊ ' என்று சப்தமிட்ட பெருநரி
கூட்டம் !
'பக் ' என்று பயம் நெஞ்சில் இட்டது
வட்டம் !
'கப் ' என்று மரம் எனை தூக்கி வைத்தது
அதன் பக்கம் !

வியப்பில் விரிந்தது என் இரு கண்மணி !
பய வேர்வையில் நனைந்தது என் கருமேனி !
திகைப்பில் துடித்தது என் இதயத்தமனி !

'திக் ' என்ற பயத்தினிலே !
திக்கற்ற காட்டினிலே
மரம் செய்த கூத்தினிலே
மயக்க முற்றேன் அவ்விரவினிலே !

**********திக்கு தெரியாத காட்டினிலே
முற்றும் *************
----------------------------------------------------------------
----------------------------------------------------------------
தந்திர காட்டில் நான் மீண்டும் (2) விதைக்காத விதையில் விளைந்த மரம் நான் !
என்று புதியதலைப்போடு இக்கவியின் தொடர்ச்சியை தொடர்வேன் மரம் என்னோடு பேசுவது போல் அமைக்கவிருக்கிறேன் உங்கள் அன்பார்ந்த வாழ்த்துகளோடு !

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (1-Feb-13, 10:41 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 133

மேலே