உன் சேலையின் வாசனை
உன் சேலையின் வாசனை
எனக்குள்ளே வீசிக் கொண்டே
இருக்க வேண்டும்...
நீ ஊட்டி விட்ட உணவு
என் உயிரில் கலந்து
இனிக்க வேண்டும்..
உன் அருகே நான் தூங்கிய
தூக்கம் எனக்குள்
நிம்மதியை தந்து கொண்டே
இருக்க வேண்டும்.....
தாயாக நீ என்னை
வளர்த்த காலம் போய்
நான் உனக்கு தாயாகி
சேவை செய்ய வேண்டும்...
அன்பின் அன்னையே....