விழுதுகள் நாங்கள்

இறுதி யுத்தம் என்றுரைத்தாய் தொடக்கமாகிபோனது
காடுவெட்டி முகாம்கள் என்றாய் முள்ளின் முனையானது
தீயினில் வெந்த திசுக்கள் தின்னும் தினம் தினம் உடலை
வெந்த புண்ணுக்கு வெயில் கூட இல்லை காடுகளின் இருளில்
மீள் குடியேற்றம் என்று மீண்டும் தள்ளுகிறாய் கற்கால காடுகளில்
ஓடி உழைக்க கால்கள் இல்லை கைகள் இல்லை கண்கள் இல்லை
இப்படியா என்சமூகம் சிதைவது
நாம் இங்கே சிகையலங்கார செலவுகளில்
வறண்ட உதடுகளுக்கு காய்ந்துபோன நிலம்
மட்டுமே காணக்கிடைகிறது
விரல் அடிபட்டு ரத்தம் வரும்போது
கண்கள் ரசிக்குமோ காயத்தை
எல்லை கோடுகொண்டு கொன்று குவிக்கிறாய்
எதுவும் அறியாதவர்களை தின்று குவிக்கிறாய்
இறந்தவர்கள் எல்லாம் இழந்தது போக
இருப்பதை நீயும் கொய்ய நினைக்கிறாய்
ஒழித்துவிட்டோம் என்கிறாய்
உங்களை அணுகொண்டு அழித்திருக்க வேண்டும்
எங்களின் அணுகொண்டு அடித்திருக்க வேண்டும்
சிதறி வீசி சிதைத்து விட
சில்லறை இல்லையடா
விழுதுகள் நாங்கள் விழுந்தாலும் தாங்குவோம் தமிழை விழுந்தாலும் தாங்குவோம்

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (2-Feb-13, 12:59 pm)
Tanglish : vizhuthukal naangal
பார்வை : 117

மேலே