மாம்பழ சீசன் 1

ஹோல்சேல் மாம்பழக்கடை

வாங்க வந்தவர்: ஒரிஜினல் பங்கனபல்லி மாம்பழம் உங்களுக்கு எங்கேயிருந்து வருது?

வியாபாரி: ஆந்திராவிலிருந்து வருது

வாங்க வந்தவர்: ஆந்திரால எந்த ஊர்ல இந்த மாம்பழம் விளையுது?

வியாபாரி: பங்கனபல்லி என்ற ஊர்லதான் ஒரிஜினல் பங்கனபல்லி மாம்பழம் விளையுது. நான் உங்களுக்கு அங்கேயிருந்தே வரவழைத்து தருகிறேன். உங்களுக்கு எவ்வளவு லாரி மாம்பழம் வேண்டும்?

வாங்க வந்தவர்: அய்யோ எனக்கு லாரி மாம்பழம் எல்லாம் வேண்டாம். ஒரிஜினல் பங்கனபல்லி மாம்பழத்து மரத்துல ஏறி ஒண்ணோ ரெண்டோ மாம்பழம் பறித்து, மரத்தில் உக்காந்துண்டு சுவைக்கணும் அம்புட்டுத்தேன்.

வியாபாரி (தனக்குள்ளே முணுமுணுத்துக்கொள்கிறார் "சரியான சாவுகிராக்கி வந்துட்டான்”): அதோ பாரு ஒரு லாரி போகுது. அதுல ஏறி உக்காந்துக்கோ. உன்ன நேரா ஆந்திர கூட்டிகிட்டு நீ சொன்ன மாந்தோப்புக்கு போகும். மரத்துல ஏறி ரெண்டு என்ன, இருபது மாம்பழம் பறித்து தின்னுக்கோ. இப்போ இந்த இடத்தை விட்டு காலி பண்ணு. இனிமேல் இந்தமாதிரி குழந்தைத்தனமான விஷயத்துக்கு இந்த மார்க்கெட் பக்கம் வராதே. கூகுலு பூகுலு ஏதோ இருக்கே. அதை பார்த்து தெரிஞ்சிக்கோ. ஆமாம், பாத்தா ஷோக்கா ட்ரஸ் பண்ணிகீறே. உனக்கு அம்பது வயசு இருக்குமா?

வாங்க வந்தவர்: எனக்கு இன்னிக்குதான் இருபத்தியஞ்சு வயசு முடியுது. சரி லாரி பக்கத்துல வந்துட்டு. நான் ஆந்திரா போறேன். ஐயா ஐயா ஐயா. ஜாலி ஜாலி ஜாலி
வியாபாரி: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-May-24, 3:07 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 18

சிறந்த நகைச்சுவைகள்

மேலே