மாம்பழ சீசன் 2
மாம்பழம் வாங்கி சென்றவர்: இந்தாங்க மீதியுள்ள மாம்பழம். கிளிமூக்கு மாம்பழம் என்று சொல்லி கொடுத்தீர்கள். எங்க வீட்டு பச்சைகிளிக்கு கொடுத்தேன். ஒரு துண்டை சாப்பிட்டுவிட்டு ' சீ, போ, இந்த மாம்பழம் புளிப்பு ' என்று நிராகரித்துவிட்டது. மீதியுள்ள பழத்துக்கு காசை கொடுங்க.
மாம்பழ வியாபாரி: உங்க ஊட்டு கிளிக்கு நல்ல மூளை கீது. பரவாயில்ல, உங்க மூக்கு கூட கிளிமூக்கு மாதிரிதான் இருக்குது. மீதி பழத்தை நீங்களே சாப்பிட்டுடுங்க.
மாம்பழம் வாங்கி சென்றவர்:???