மாம்பழ சீசன் 3

வாங்க வந்தவர்: ஏங்க பழக்காரரே, உங்க கிட்ட கருப்பு மாம்பழம் இருந்தா, அதை நறுக்கி ஒரு கதுப்பு கொடுங்க. இனிப்பா இருந்துச்சுன்னா ஒரு முழு கருப்பு மாம்பழம் வாங்கிக்கிறேன்.

பழவியாபாரி: இங்கே கருப்பு வெள்ளை மாம்பழம் எல்லாம் இல்லை. வேணும்னா ஒரு மஞ்சள் மாம்பழத்தை வாங்கி நறுக்கி, ஒரு கதுப்பை உன் மூஞ்சிலே நல்லா தேய்ச்சேன்னா அது நல்லா கருப்பாயிடும். ஆமாம், தெரியாமத்தான் கேக்கிறேன். உன் பேரு என்ன கருப்புசாமியா?

வாங்க வந்தவர்: அது எப்படி அவ்வளவு சரியா சொன்னீங்க. உங்க வாய்க்கு ஒரு கருப்பு மாம்பழம் தான் நறுக்கித்தான் போடணும்.

பழவியாபாரி: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (14-May-24, 4:10 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 18

மேலே