மாம்பழ சீசன் 4

நிருபர்: அம்மா, உங்க பேரு என்னங்க?
வியாபாரி: முருங்கை மல்லிகா
நிருபர்: நீங்க முருங்கை வியாபாரமும் செய்யுறீங்களா?
வியாபாரி: இல்லை. என் கணவர் பேரு முருங்கை. அவர் முருங்கை கீரை வியாபாரம் செய்யறாரு
நிருபர்: உங்க தோட்டத்தில் முருங்கை விளையும்போது முருங்கை காய் வியாபாரம் செய்யலாமே?
வியாபாரி: செய்யலாம்தான். ஆனால் முருங்கை தோட்டம் பக்கத்துக்கு வீட்டுல இருக்கறதால, முருங்கை கீரையை மட்டும் நைசா நான் பரிசு தந்தா, என் கணவர் முருங்கை அதை வியாபாரம் செஞ்சுடுவாரு.
நிருபர்: நீங்க என்ன வியாபாரம் செய்யுறீங்க?
வியாபாரி: மல்லிகா
நிருபர்: உங்க பேரைதான் சொல்லிடீங்களே. நீங்க என்ன பழம் வச்சு வியாபாரம் செய்யுறீங்க?
வியாபாரி: அதுதாம்பா நானும் சொல்றேன். மல்லிகாவை வச்சுதான் வியாபாரம் பண்ணுறேன். இதோ பாரு எவ்வளவு அருமையா வாசனை .
நிருபர் : ஓஹோ,இப்போ புரியுது நீங்க விற்கிற மாம்பழம் பேரு மல்லிகா.
வியாபாரி: ஆமாம். இந்தா வாங்கிக்க ஒரு அஞ்சு கிலோ. உங்க தெருவே மணந்து போகும்.
நிருபர்: எனக்கு ஒரு கிலோ போதும்
வியாபாரி: அப்போ ரெண்டு பழம்தான் வரும்.
நிருபர்: ரெண்டு மல்லிகா மாம்பழமே எனக்கு போதும்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-May-24, 3:15 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 22

மேலே