மாம்பழ சீசன்

வாங்க வந்தவர்: இங்கே மாம்பழம் கிடைக்குமா?

வியாபாரி: மாம்பலம் மாம்பழக்கடை என்று போர்டே போட்டிருக்கே. அப்புறம் என்ன உங்களுக்கு சந்தேகம்?

வாங்க வந்தவர்: என்னென்ன மாம்பழம் இருக்கு?

வியாபாரி: அதோ உங்க பக்கத்திலே சூப்பர் பங்கனபல்லி இருக்கு.

வாங்க வந்தவர்: அய்யோ எனக்கு பல்லியெல்லாம் வேண்டாம். வெஜிடேரியன் மாம்பழம்மா பார்த்து சொல்லுங்க.

வியாபாரி (தனக்குள்ளே முணுமுணுத்துக்கொள்கிறார் "சரியான சாவுகிராக்கி வந்துட்டான்): இதோ பாரு, இது மல்கோவா

வாங்க வந்தவர்: எனக்கு கோவா பிடிக்காது. அங்கே எங்கே பார்த்தாலும் ட்ரிங்க்ஸ் பண்ணிகிட்டே இருப்பாங்க.

வியாபாரி: யோவ், நீ என்ன இங்க பழம் வாங்க வந்தியா இல்லாட்டி நையாண்டி பண்ண வந்தியா.

வாங்க வந்தவர்: ஐயோ அப்படியெல்லாம் இல்லங்க. வேற மாம்பழம் சொல்லுங்க

வியாபாரி: நீலம், ருமானி, பீத்தர், அல்போன்சா

வாங்க வந்தவர்: பீத்தர், அல்போன்சா இதெல்லாம் ரொம்ப மோசமான பேரு. நீலம் ருமானியிலேயே காமிங்க.

வியாபாரி: இதோ இது நீலம், இது ருமானி. எவ்வளவு கிலோ வேணும்?

வாங்க வந்தவர்: ரெண்டுத்துலேயும் கொஞ்சம் டேஸ்ட் பண்ண கொஞ்சம் கட் பண்ணி கொடுங்க.

வியாபாரி: இந்தா, ஏற்கெனவே வெட்டி வச்ச துண்டு ரெண்டு.

வாங்க வந்தவர்: (ருசித்து விட்டு) ரொம்ப இனிப்பு இல்லை.

வியாபாரி: நீ வாங்கி போய் நாளைக்கு துண்ணா நல்லா இனிப்பா இருக்கும்.

வாங்க வந்தவர்: நல்லா பழமா பொறுக்கி எடுத்து, ஒரே ஒரு ருமானி, ஒரு நீலம் கொடுங்க. நாளைக்கு சாப்பிட்டுவிட்டு, இனிப்பா இருந்தா உங்களுக்கு ஜீபேய் பண்ணிடறேன்.

பழவியாபாரி கோபத்தில், ஒரு நல்ல பெரிய பங்கனபல்லி மாம்பழத்தை வாங்க வந்தவர் முகத்தின்மீது வேகமாக வீசியெறிய, அவர் அந்த மாம்பழத்தை அப்படியே கேட்ச் பிடிச்சிட்டு அவருடைய சின்ன பையில் போட்டுகொண்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தார்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-May-24, 3:05 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : maambaza seesan
பார்வை : 24

மேலே