உடைந்த வளையல்கள்!

அந்நாளில்,
மிக எளிதாக, "இது சரி வராது" என்றாய்...
இந்நாட்களில்,
மிக அரிதாக தூங்குகிறேன் நான்!

கொடுத்ததென்னவோ
முத்தங்கள்தாம்!
நான் பெற்றதென்னவோ
நினைவுகள்!

பரிமாறியது
பலமணிநேரங்கள் தான்...
பாழாய்ப்போனது
எனக்கு பல வருடங்கள்!

அப்பா, ஆட்டுக்குட்டி,
என்று உயிரெழுத்து வார்த்தைகளில்
நம் காதலுக்கு உலை வைத்தாய்...
பிரிதல் கலைக்கு நீதானடி தாய்!

காதல், கல்யாணம்,
கச்சேரி, இத்யாதி இத்யாதி
என்று வளைகாப்பு வளையல் வரை வந்தோம்...
உடைந்தே விட்டன...போடி!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (2-Feb-13, 7:28 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 167

மேலே