கவிதையின் பிறப்பிற்கு காரணம்

என் கவிதையின் பிறப்பிற்கு காரணம்
என் தோழியின் பிரிவு
அவளின் பிரிவுதான் எனக்குள் உள்ள
கவிதை திறனை உணர்த்தியது
என் கவிதைக்கு வாழ்வும் கொடுத்தது
என்னாலும் உணர்ச்சிபூர்வமான வரிகள்
வடிக்க முடியும் என்று உணர்த்தியது
ஒருவரின் பிரிவால் தான் எத்தனை நல்ல விஷயங்கள்,
ஆனால் தனிமையை ரசித்தேன்
தனிமை என்னை இனிமையாக மாற்றியது
புதுபுது எண்ணங்களை புகுத்தியது
அமைதியான வாழ்கையை காட்டியது
தனிமையை விட சிறந்த நண்பன் இந்த உலகத்தில் யாருமில்லை.
நம்மை யாரென நமக்கு உணர்த்தும்
நமக்குள் தனிமை இருந்தால்.

எழுதியவர் : நிகோலின் சிந்துஜா (11-Nov-10, 1:34 pm)
பார்வை : 587

மேலே