சாராம்சம் இதுவோ..!!!!!

கல்வி சில கற்று
அனுபவம் சில பெற்று
கல்விக் கரை தேடி வந்து நாம்
தன் உறையுள் வாயில் நின்ற வேளை
உகப்புடனே உள்வாங்கிய கல்லூரியையும்

வாழ்க்கை என்ற ஏட்டினிலே
சாதனைகள் பல செய்திடவே
வேதனைகள் பல ஏற்றிடணும் - என
போதனைகள் பல ஊட்டி
எமக்காக தம்மை இழந்த நம்
அன்பின் ஆசான்களையும்

தோல்விதனைக் காண்கின்ற வேளை
மனமுடைந்து விடாதே ஒரு கணமும்
வெற்றிப்படியதனை எட்டிப்பிடிக்க
எம்மை உபயோகிப்பீர்
என்று உரைத்து தம்மையே
எமக்காகத் தியாகித்த சகாக்களையும்

இலைகள்தான் பலவடிவம் - ஆனால்
அனைத்தும் ஒரு கிளையின் படிவம் என்று
ஒற்றுமைக்கு பாலம் அளித்து
வேற்றுமையின் ஓலம் ஒழித்து
ஒன்றாய் உறவாடிய
இனிய நண்பர்களையும்

தாம் பெற்றெடுத்தவை
கல்விதனை பெற்றேடுக்கனும் - என்று
ஆர்வம் கொண்டு
அதற்காகவே அயராது உழைத்த
எம் பெற்றோரின் உதவிக் கரங்களையும்

பள்ளிப் பருவமதில்
துள்ளித் திரிந்தே ஒன்றாய்
எள்ளி நகையாடிய அணைத்து
நினைவுச் சின்னங்களையும் - ஆம்
நாம் பதித்த சுவடுகளையும்
விட்டு மாறா நினைவுகளுடன்
துயருடனே பிரிகின்றோம்

பெரும் பெரியவர்கள்
பெரு வாழ்வு வாழ்ந்தார்கள்
என்று சாகித்தியங்களும் சரித்திரங்களும்
பறைசாற்றி நிற்கின்றனவே
அப்பெரியர்கள் வாழ்ந்த வாழ்வின்
"சாராம்சம் இதுவோ"

கியாஸ் கலீல்
11th November 2010

எழுதியவர் : கியாஸ் கலீல் (11-Nov-10, 1:37 pm)
சேர்த்தது : கியாஸ் கலீல்
பார்வை : 436

மேலே