என் காதலிக்கு
கடல் கடந்து வந்தேன் என் கண்மணியை விட்டு
இன்று கண்ணீர் கடலில் நிற்கின்றேன்
எந்தன் இதயம் பாடுகின்றது காதல் மெட்டு ..
உன் புன்னகை ஒன்று போதுமடி எனக்கு
நான் என்றும் இருப்பேன் உன் காலடி தொட்டு ..
உன்னை முதல் முறை கண்டபொழுது
கண்ணே நான் உணர்ந்தேன் காதல் இதுதானோ என்று ..
அன்று நீ என்னுடன் பேசிய ஓரிரு வார்த்தைகள்
நின்றது எந்தன் உள்ளத்தில் தொன்று தொட்டு
சிகப்பு நிறம் அழகானது எனக்கு அன்று
என் கண்மணிக்கு தெரியும் அது ஏன் என்று ..
நான் முடிவு செய்தேன் அப்பொழுது
நீ தான் என் உலகம் என்று என் வாழ்க்கை துணைவி என்று ..
நான் கலங்கிய பொழுதெல்லாம் எந்தன் கரம் பிடித்தாய்
கண்ணே நான் மறந்தேன் அனைத்தையும் அன்று ..
இந்த உலகம் பொய்யானது எனக்கு
கண்ணே உன் அன்பு ஒன்று மட்டும் வேண்டுமடி என்றுமே எனக்கு ..
பலமுறை சிந்திதேன் இது எனக்கு எப்படி என்று
கண்ணே உன் அன்பு எனக்கு எப்படி என்று..
உன் இதயத்தில் இடம் கொடுத்தாய்
நான் உணர்ந்தேன் இந்த பூமியில் ஏன் பிறந்தேன் என்று..
உன்னிடம் கவிதை உரைக்கும் பொழுதெல்லாம் கேட்பாய்
இது நீதான் படைத்ததா என்று
இன்று என் கண்மணி உணர்வால் உண்மை என்னவென்று ..
மலரே உன்னை பிரிந்து இருக்கும் நேரம் எனக்கு நரகம்
உன் பிரிவு ஒன்றுமட்டும் தான் எனக்கு துயரம் ..
நினைத்தபொழுது உன்னை கண்டேன் உன்னருகில் இருந்தபொழுது
இன்று நினைக்கின்றேன் நான் ஏன் இப்படி வந்தேன் என்று..
உன் கரம் பிடித்த பொழுதெல்லாம் உணர்ந்தேன்
மகிழ்ச்சி என்றால் என்னவென்று ..
உன் கரம் இன்று வேண்டும் கண்ணே எனக்கு
என் துயரம் எல்லாம் பறந்து போகும் உன் அன்பால் எனக்கு ..
கடவுள் யார் தான் என்று வினவினேன் எனக்குள்
இறுதியில் உணர்ந்தேன் அது என் கண்மணியின் அன்பு தான் என்று ..
உன் பிறந்தநாள் வரும்பொழுதெல்லாம் நினைப்பேன்
உன்னுடன் என் கரம் சேர்த்து உந்தன் கண்மலர்கள் காணவேண்டும் என்று
அதுதான் என் வாழ்நாளில் பொன்நாள் என்றுமே எனக்கு..
என் செல்லமே என் உயிரே என் உலகமே
என்று நீ கிடைப்பாய் எனக்கு ..
நான் காத்து கொண்டிருக்கிறேன் அந்நாளுக்கு அந்த போன்னாளுக்கு..
உந்தன் புன்சிரிப்பை கானும்போழுதே மரணம் வேண்டுமடி எனக்கு
அதுதான் என் வேண்டுகோள் அந்த கடவுளுக்கு ..
நான் படைத்த இந்த மடல்
என்றுமே சமர்ப்பணம் எந்தன் கண்மணிக்கு ..