காதல் பிரிவு
நினைத்த பொழுது என் நெஞ்சில் நின்றாய்
காரணம் கேட்டேன் கடவுளிடம்
இவள்தான் உன் துணைவி என்றான்.
மகிழ்ச்சியை நொடிப்பொழுதில் உணர்ந்தேன்
உன்னை கண்டபொழுதெல்லாம் .
இன்று நான் கலங்கும் நேரம்
எந்தன் இதயம் என்னிடம் இல்லை
கண்ணே நீ என்னுடன் இல்லை .
மரணம் என்று ஒன்று இருந்தால்
அது உந்தன் அன்பு மடியில் வேண்டும் எனக்கு .
உன் புன்னகை ஒன்று போதும் கண்ணே
நான் என்றும் கண்ணுறங்க .