கைம்பெண்

என் கணவன் யாரென்று
அறியுமுன்னரே நான்
அணிந்து இருக்கிறேன்
குங்குமமும் மஞ்சளும்
இப்பொழுது என் பறிக்கபட்டது !

கணவன் அற்றவள் என்பதாலா!

சிறுவயதிலிருந்தே சிரித்து
பேசிஇருக்கிறேன்
இப்பொழுது சிரித்தால்
கேலி பேசுகிறது
உலகம் !

தம்பதியர் கொஞ்சும்போது
தலையணை மட்டுமே
தருகிறது எனக்கான
தஞ்சம் !

மாலை சூடும்போது
மலை மலையாய் கனவுகள்
வாழ்வுமுளுவதும் அவனோடு
இனிய உறவுகள்
என்று எண்ணிய தருணம் போய்

இன்று நான் தொட்ட மலரும்
தீட்டாகிவிட்டதே இந்த
சமுகத்தால் !

எழுதியவர் : தேவி நடராஜன் (6-Feb-13, 12:09 pm)
பார்வை : 110

மேலே