பிறவி பயணம்

வாழ்க்கை மிகவும் ஆழமானது!
ஆழமறிய ஆயத்தமாயின
எனது பிறவி பயணம்.

ஆரம்பத்தில் அழகிய மீன்களாய்
புன்னகையில் நீந்தும் சிலநிமிடங்கள்
பின்பு, கடல் போர்த்திய எரிமலையாய்
குமுற காத்திருந்த அனல் நிமிடங்கள்

மீன்களை காண மனம் துடித்தும்
வழித்தடங்கள் ஏதுமில்லை!
விட்டுச் சென்ற தடயங்களும்
வழியில் ஏதுமில்லை!

விரும்பியும் விரும்பாமலும் சென்ற நிமிடங்கள்
இலக்கு அடையும்முன் இளைத்துவிட்டது.
உயிர், ஆழமறியாமல் விலகிவிட்டது!!!

எழுதியவர் : சுமி (6-Feb-13, 5:47 pm)
பார்வை : 179

மேலே