தொண்டு

பேருக்கென செய்வதொன்று என்று
..பேரேடுத்தோர் செய்வதல்ல தொண்டு.
ஊருக்கென செய்வதென எல்லா
..ஊருக்கும் தம்பட்ட மடித்து
பாருக்குள் தன்னலத்துக் காக
..பார்ப்போரை யற்ற்புதத்தி லாழ்த்த
கூறுகின்ற மிகைசொற்க ளாலே
..கொலைசெய்து பார்ப்பதல்ல தொண்டு..

தொண்டாற்ற லோன்றேதான் வாழ்வின்
..தொண்டென்று தொணதொணத்துக் கொண்டு
கொண்டாட்டம் காண்பதனை தொண்டாய்
..கொண்டேதான் தொண்டாற்றுவோர்கள்
வண்டாட்டம் சிறகடிக்கும் நெஞ்சை
..வரவேற்கும் பெருமிதத்தில் மிதந்து
திண்டாட்டம் கொள்வதற்காய் செய்யும்
..தில்லுமுல்ல லவுண்மை தொண்டு

மனமுவந்து கடவுளுக்கும் மண்வாழ்
..மாற்றுத்திற நாளிகட்கும் ,மற்றும்
மனமுடைந்து வாழ்விழந்து தவிக்கும்
..மாந்தர்கள் யாவர்க்கும் இரக்கக்
குணத்தோடு தன்னலங்கள் இன்றி
..கொடுத்துதவி அரவணைத்து ஆற்றும்
பணிகளொன்றே பண்புடைய உயரிய
..பரிசுத்த பேரின்பத் தொண்டு.
..


..




















































































































.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Feb-13, 12:26 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 1326

மேலே