நட்பின் பிறப்பு

இவ்வாழ்க்கை
வரம் கொடுத்தது
எனக்கு,
உனது நண்பனாக,
நண்பன் என்றால்
கூட இருப்பது
மட்டுமல்ல,
உனக்காக நான்,
எனக்காக நீ,
என்று வாய் வார்த்தை
பேசாமல்,
வாழ்ந்து காட்டும்
ஓருணர்வு நெஞ்சங்களாக
நம் வாழ்க்கை
இக்கல்லூரியில்....

வகுப்பறைக்கு
செல்லும் வழியில்
ஒரு உல்லாச பயணம்
நண்பர்களோடு,
வழியில் செல்லும்
மாணவிகளை
உபசரித்தல்(comment)....

சின்ன சின்ன
உதவிகள்,
சின்னத் தனமான
விவாதங்கள் ,
முதல் பார்வை(first sight)
பகிர்வுகள்,
காதல் தோல்வியில்
குறும்புத்தனம்,
கேலி, கிண்டல்
இவை அனைத்தும்
நம் நட்பில்...

வாழ்க்கையில்
கற்று விட்டேன்,
மகிழ்ச்சியும்,
சோகம் கலந்த மகிழ்ச்சியும்,
நண்பர்களின் துணையோடு,
சோகம் மட்டும் கண்டதில்லை
அவர்கள் இருக்கும் வரை ....

நட்பு என்ற
இனம் புரியாத
வார்த்தைக்கு
அர்த்தங்கள்
உன் உருவிலும்
கண்டேன்...

எழுதியவர் : Anbu (7-Feb-13, 6:05 pm)
சேர்த்தது : Anbu Kalai
Tanglish : natpin pirappu
பார்வை : 94

மேலே