மட்ட மடித்தோம்
கல்லூரி நாட்களை கள்ளூற கொண்டுவந்தேன்
புல்லுருவிப் புதைந்த காதலும் முகர்ந்தது
பல்லூரின் நண்பரும் வசிக்கும் விடுதிதான்
மல்லேறி நிற்கும் எனக்கு வீடானது
நல்லாசிப் பெற்றதால் தமிழ்மகளை கண்டிருந்தேன்
வில்லாகி தொடுத்த காதலை காட்டியது
கல்லாது மட்டம் அடித்தோம் அல்லாது
செல்லா நகரமெலாம் சுற்றி வந்தோம்
அள்ளாத சப்தமாய் தம்பட்டம் அடித்தோம்
எல்லா நாட்களின் மாலை நேரமும்
சில்லா மனந்திறந்து தத்தமாய் வாசித்தோம்
நில்லா நட்பில் நடந்து கிடந்தோம்
மெல்ல தேர்வு நெருங்கும் நேரத்தில்
வெல்லும் பொருட்டு விடியும் வரையில்
கல்லூற கண்ணயரா பண்ணுயர படித்திருந்தோம்