உயிர் ஆறு வகை

நட்பெனும் நெருப்பின் மேல் (அக்னி )
நிமிர்ந்து உருகி வெம்பி நடந்து மகிழடா...!

நட்பெனும் பூட்டும் சாவியும் போலே (ஆகாயம் )
இந்த உடல்மேலே எந்நாளும் மகிழடா...

கீறாமல் கிழிக்காமல் அமைத்தே அமைதியாக
ரத்தம் சிந்தியே ஊனோடு உயிராய் முட்டி மோதியே
உறைந்து மகிழடா ..(நிலம் )

ராவானாலும் கிழக்கு வெளுத்தாலும்
தடையின்றி ஓடும் நீரலை போலே (நீர் )

வற்றாத கீற்று நரம்பின் சுவாசத்திலே (காற்று) ஜீவமாய் உயிர்ப்பித்து மூச்சுக் காற்றிலே
வற்றாமல் வடியாமல் கடிகார முட்களைபோலே
சற்றும் சலியாது இதயத்தின் துடிப்புகளாய்
எண்ணி மகிழ்ந்திடடா......!

வானத்தில் பறக்கும் பட்டம் போலே
வானர யுத்தம் நடந்தாலும் அசைந்தாலும்
தாயைத் தேடும் சேயை போலே
தாய் மடி என்றே பூமியை வந்தே தானடா...

இமையை கடிவாளமாய்
நெஞ்சத்தை அணையாத தீபமாய்
வண்ணமாகச் செல்லும் ஒளியின் பல்
வர்ணங்களில் மிதந்து மகிழடா ...(வாயு )

சொல்லவும் வழியில்லை வார்த்தை எதுமில்லை
என்னோட வகையிலே உயிர் ஆறுவகை தானடா...!!

எழுதியவர் : ஜெயா ராஜரெத்தினம் (7-Feb-13, 11:28 am)
பார்வை : 250

மேலே