உறவுகளுக்கு வணக்கம்,

உறவுகளுக்கு வணக்கம்,

ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற
உறவுகளுக்கு வணக்கம்,

உயிருக்கு போராடும் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுமாறு அன்புடன் கோருகிறேன்.

சென்னையில் வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் திரு. ஆனந்த் - மகேஸ்வரி தம்பிதியின் ஒரு வயது குழந்தைக்கு மூளையில் (Hemimegalencephaly) என்ற நோய் தாக்கியுள்ளது. இந்த நோய் லட்சத்தில் ஒரு குழந்தையை தாக்கும் அரிதான நோய் என்று சொல்லபடுகிறது. தற்போது இந்த குழந்தை உயிரை காப்பற்ற உடனடியாக ஒரீரு வாரங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை பெங்களூரு, விக்ரம் மருத்துவமனையில் செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்த்துள்ளனர். 3 இலட்சம் ரூபாய் வரை பணம் இந்த அறுவை சிகிச்சைக்கு செலவாகும் என்று கணக்கிட்டுள்ளனர். ஏற்கனவே குழந்தையின் மருத்துவ செலவுக்கு 3 இலட்சத்திற்கும் மேல் செலவழித்து விட்டு மிகவும் வறுமையில் இருக்கும் அவர்களால் இத்தனை பெரிய தொகையை ஏற்பாடு செய்ய இயலாது. ஆக தங்களால் இயன்ற தொகையை (3000 நபர்கள் X 100 ரூபாய் உதவினால் கூட 3 இலட்சம் ரூபாய் நிதியை திரட்ட முடியும்) கொடுத்து உதவுங்கள். ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற, இழந்த ஒரு குடும்பத்தின் அமைதியை திருப்பி தர, கண்ணீருக்குள் மூழ்கிய அவர்களின் புன்னகையை மீட்டெடுக்க விரும்பும் கருணை இதயம் கொண்டவர்கள் இந்த அறுவை சிகிச்சைக்கு தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு அன்புடன் கேட்டு கொண்டு, அவர்கள் சார்பாக நான் உங்களிடம் கை ஏந்துகிறேன்... உதவி செய்யுங்கள் உறவுகளே....

மேலே குறிப்பிட்ட விபரம் அனைத்தும் உண்மை. நமது நெருங்கிய நண்பர் திரு ஜெகதீஸ்வரன் அவர்களின் அக்கா திருமதி மகேஸ்வரி அவர்களின் குழந்தைக்கு தான் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது.

விபரம் :
குழந்தையின் பெயர் : சைலேஷ் ராம்,
வயது - 1,
பெற்றோர் : திரு. ஆனந்த் - மகேஸ்வரி,
தொடர்புக்கு -
9840960969, 9444662986 - திரு. ஜெகதீஸ் (திருமதி மகேஸ்வரியின் தம்பி)


பண உதவி செய்ய விரும்பும் நண்பர்கள் கவனத்திற்கு :
வங்கி விபரம் :
JEGATHEESWARAN .S
KOTAK BANK, AC NO : 2411146414,
தேனாம்பேட்டை கிளை,
சென்னை.

எழுதியவர் : sakthivel (9-Feb-13, 4:02 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 90

மேலே