ஒரு சரித்திரப் புத்தகம் புரள்கிறது

புத்தகத்துடன்
பள்ளி போகவேண்டியவன்
புழுதியுடன் புரள்கிறான்
புத்தகத்தைப் புரட்டி
புத்தி தேட வேண்டியவன்
வீதியில் காகிதத்தைப் பொறுக்குகிறான்
இது ஒரு பாரத வீதியின் சோகம்
அறுபத்தைந்து சுதந்திர ஆண்டுகள்
கடந்து விட்டன. காதிலே செல் கையிலே புத்தகமாக லாப் டாப், கேள்விக்கும் அறிவிற்கும் அறிவியல் வளர்ச்சி அள்ளி தந்திருப்பவை
எத்தனை. ஒரு புத்தகத்தை ஏந்த முடியாத கசக்கி எறிந்த சமூக காகிதக் குப்பையாக இங்கே சிறுவர்கள் எத்தனை எத்தனை.
வணக்கத்திற்கு
சுதந்திர கீதம்
வறுமைக்கு
கண்ணீரில் ராகம்
அறுபத்தைந்து
ஆண்டு காலமாக
புரள்கிறது இங்கே
ஒரு சரித்திர புத்தகம்
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
---சில வரிகளைத் தந்து பல சிந்தனைகளை
தூண்டிய ரத்னகுமாரின் " கண்ணீருடன் "
கவிதையில் எழுதிய கவிதையும் கருத்தும்.