கடைசி துடிப்பு வரை...

விட்டுச்சென்றாய்..
ஏனென்று கேட்கவில்லை
திரும்பி என்வசம் வருவாய் என்ற காத்திருப்போடு..
நீயும் வரவில்லை...
என் மனமும் மாறவில்லை..

உடைந்த கண்ணாடித் துண்டுகளாய்
கிழித்து எறியப்பட்ட காகிதமாய்
என் இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது
நீ அதனுள் இல்லையெனத் தெரியாமல்....

உன் வாழ்வில் நான் இல்லையென்றாலும் நீ இருப்பாய் என் நினைவுகளில்
இந்த உடைந்த இதயத்தின் கடைசி துடிப்பு வரை...

எழுதியவர் : இளம்பரிதி (9-Feb-13, 5:29 pm)
பார்வை : 259

மேலே