அம்மாடி..

மொட்டவிழ்ந்த மல்லிகைப்பூவும்
மண்டியிட்டுச் செல்லும்
நீ கண் விழித்துப் பார்க்கையில்..
.
அந்திநேர கார்மேகக்கூட்டங்களும்
கரும்புகையாகிப் போகும்
நீ கூந்தலைக் கோதுகையில்..

பூத்திருக்கும் நட்சத்திரங்களும்
வெறும்புள்ளிகளாகத் தெரியும்
நீ முகப்பருக்களைத் தடவுகையில்..

எழுந்து வரும் கதிரவனும்
வந்த வேகத்தில் மறைந்து போகும்
நீ பெருமூச்சு விடுகையில்..

ஒளிந்து வரும் வெண்ணிலவும்
வேண்டாமென்று திரும்பிப்போகும்
நீ கொஞ்சம் அன்னார்ந்துப் பார்க்கையில்..

அம்மாடி..
இப்படி இத்தனை அழகை நீ பெற்றால்
கண்ணில்லாதவன் கூட வானியல் படிப்பான்
உன்னைத் தொட்டு..

எழுதியவர் : இளம்பரிதி (9-Feb-13, 5:30 pm)
பார்வை : 110

மேலே