சில ஹைடெக் கவிதைகள்!

அம்மா-

அம்மா என்றுதான் அலறியது
கீழே விழுந்து அடிபட்ட போதும்
அந்த அ.தி.மு.க. தொண்டரின் குழந்தை...!
அம்மாடா....
பிழைத்துக் கொண்டார் அவர்
அம்மாடா....
பிழைத்துக்கொண்டது அவர் பதவி!

பகுத்தறிவு-

பிள்ளையாருக்கு எறிந்த
சிதர்தேங்காய்
அருகிலிருந்த
பெரியார் சிலை காலடியில்....
அதை எடுத்து
மண்ணைத் துடைத்து....
ஆத்திகரிடமே கொடுத்தார் அவரும்.

கடல்-

இரண்டுமணிநேரமாய்
சாத்தானின் கூக்குரல்
மரணக்கடலின்
கொடூர அலைகள்
அத்தனையும் முடிந்தது
கடல் வற்றிப்போனது....
திரையரங்கில்..

விஸ்வரூபம்-

சும்மா கிடந்த சங்கை
ஊதி கெடுத்தான் ஆண்டி...!
அப்படியினா....?
அமைதியை அமளியாக்குவதா...?
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு

ஹைடெக் கவிதை-

ஹைக்கூ கவிதை தெரியும்
இஃது என்ன புதுசா
ஹைடெக் கவிதை...?
காகிதத்தில் எழுதினால் ஹைக்கூ
கணனியில் எழுதியதால் ஹைடெக்!

......................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (10-Feb-13, 7:58 pm)
பார்வை : 154

மேலே