நான் காதலன் நீ காதலி
நான் காதலன்
நீ காதலி
வறுமைக்கு வாழ்க்கை பட்டவள் நீ
துயரத்தை குத்தகை எடுத்தவன் நான்
ஏழ்மையில் தவித்தவள் நீ
துயரத்தில் துடித்தவன் நான்
நான் காதலன்
நீ காதலி
உன் பார்வைக்காய் ஏங்கி தவித்தவன் நான்
என்னை பார்த்தும் பார்க்காததுபோல் சென்றவள் நீ
மணி கணக்காய் காத்திருந்தவன் நான்
நொடிபொழுதில் கடந்தவள் நீ
நான் காதலன்
நீ காதலி
உன் புன்னைகையை பார்க்க பரிதவித்தவன் நான்
ஒரு கோப பார்வையில் என்னை சுட்டவள் நீ
நீ பார்க்காமல் சென்றால் சோகத்தை தின்றவன் நான்
தொலைதூரம் சென்று என்ன சோகத்தை ரசித்தவள் நீ
நான் காதலன்
நீ காதலி
ஒற்றை வார்த்தை உன்னிடம் சொல்ல
ஒருகோடி முறை ஒத்திகை பார்த்தவன் நான்
ஒரே ஒரு பார்வையில் என் தாய்மொழியையும் சேர்த்து மறக்க செய்தவள் நீ
ஒரு வழியாய் காதலை சொல்லி
உன் பதில் வரும் வரை நூறு முறை
செத்து பிழைத்தவன் நான்
உன்னை எப்பவோ காதலிக்க துவங்கிட்டேன் என்று ஒரு வரியில் எனக்கு வாழ்க்கை தந்தவள் நீ
நான் காதலன்
நீ காதலி
வாங்க என்றேன், வாம்மா என்றேன்
வாடி போடி என்று சொல்லும் அளவு
காதலை மெல்ல மெல்ல வளர்த்தவன் நான்
காதலை சொன்ன மறுகணமே
வாடா போடா என்று கொஞ்சியவள் நீ
நான் காதலன்
நீ காதலி
பெண்ணே
இப்பொழுது சொல்ல முடியுமா
நான் காதலன்
நீ காதலி என்று
வேண்டாம் சொல்லி விடாதே
இப்பொழுது சொன்னால்
நம் நல்ல காதலும் கள்ள காதலாய் பெயர் மாறும்
நடத்தை கெட்டவள் என்ற பட்டம் உன்னை சேரும்
இதற்காகவா விரல்கள் கூட தொட்டு கொள்ளாமல்
காதலிலும் கண்ணியத்தை வளர்த்தோம்
இரண்டு பிள்ளைகளின் தந்தை நான்
மூன்று குழந்தைகளை பெற்றவள் நீ
நான்?
நீ ?
பெண்ணே நம் காதல் தோற்றதற்கு
நீயும் நானும் மட்டும் காரணம் அல்ல
இன்னுமொரு உண்மை காரணமும் உண்டு
வறுமைக்கு வாழ்க்கை பட்டவள் நீ
துயரத்தை குத்தகை எடுத்தவன் நான்
ஏழ்மையில் தவித்தவள் நீ
துயரத்தில் துடித்தவன் நான்
அப்புறம் தானே காதலிக்கவே
கற்று கொண்டோம்
ஏழைகளின் காதலும் வாழ்கையும்
சோகத்தை மட்டுமே சுமந்து வாழும்
நாம் மட்டும் விதிவிலக்கா?
எனினும் இன்னொரு பிறவி
மீண்டும் கிடைத்தால்
நான் காதலன்
நீ காதலி
என்றும் அன்புடன்
சத்யா