வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிரான தகவல்களை தரும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் - சொல்கிறார் கோத்தபாய ராஜக்சே ...!

இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே கொழும்புவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இவ்வாறு கூறியுள்ளார். உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலக நாடுகளை வற்புறுத்துகின்றனர். இலங்கையில் செயல்பட்ட விடுத்தலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவத் தலைமை அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அது உலகளவில் பரவிய ஒரு மிகப்பெரிய இயக்கம். அவர்கள் பன்னாட்டு தொடர்புகளை பெற ஜனநாயக முகத்தை ஏற்று இருக்கிறார்கள்.தமிழீழ விடுதலைப் புலிகளால் தான் தமிழர்கள் புலம்பெயர நேரிட்டது. ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சர்வதேச சமூகம், இலங்கைக்கு எதிராக செயல்படுகிறது. இதனாலேயே எங்களுக்கு எதிரான குரலாக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் எதிரொலிக்கிறது...

இவ்வாறு கூறியுள்ளார் கோத்தபாய எப்படி இருக்கிறது கதை...? பன்னாட்டு தொடர்புகளை பெறுவதற்கு ஜனநாயக முகத்தை போட்டு வருகிறார்கள் என்கிறார். அதாவது விடுதலைப் புலிகள் என்றால் அவர்கள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் தான்...அது எந்த வடிவத்தில் வந்தாலும் அதாவது பிரிவினை வடிவத்தில் மத வடிவத்தில் என்றாலும்...நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது என்று சொல்கிறார்.

இலங்கை என்ற நாடு ஜனநாயகத்தை ஓங்கி உயர்த்திப் பிடிக்கும் நாடு...இங்கு அணைத்து மதத்தினரும் இந்து, முஸ்லிம்,
கிறித்துவர், தமிழர், சிங்களவர் என்ற மக்கள் பிரிவினருக்கு ஏற்ற ஒரு சிறப்பான அரசை இயக்கிக் கொண்டிருப்பதைப் போல சொல்கிறார். எல்லாவற்றிற்கும் விடுதலைப் புலிகள் தான் காரணம் என்கிறார். புலம் பெயர் மக்கள் செல்வதற்கும் அவர்கள் தான் காரணம் என்கிறார்.

ஒட்டுமொத்தமாக ஒரு இனப் படுகொலையை செய்து விட்டு...எஞ்சி இருப்பவர்களையும் செய்து கொண்டு இருக்கும் ஒரு மக்கள் விரோத அரசு, தன் நிலை உணராமல் அமெரிக்க ஐரோப்பிய அரசுகளைப் போல பேசுவதும் அறிக்கை வெளியிடுவதும்
என்று இருப்பது....வரலாற்றில் மீண்டும் நாம் காண முடியாதவை....

தமிழ் இனத்தின் எழுச்சியால் மட்டுமே வரலாற்றில் இவர்கள் உருவாக்கிய தமிழ் இனப் படுகொலையை தடுத்து நிறுத்திட ,
மீட்டிட முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (12-Feb-13, 5:02 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 121

சிறந்த கட்டுரைகள்

மேலே