பாலியல்

நம் கேள்விதளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தரும்நோக்கதில் எழுதியது இந்த சிறிய கட்டுரை

கேள்வி :
பாலியல் குற்றங்களுக்கு தனி மனிதன் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமுதாயமும் காரணமாக இருப்பதேன் ?
************************************************************************
இது மிக பெரிய சதி ..இதற்கு மதங்கள் ,அரசியல் நோக்கம் ,என்று அனைத்தும் பங்குகொள்கின்றன ..........பாலியல் நிமித்தம் உங்கள் குழந்தைகளிடத்தில் உரையாடும் தைரியம் எத்தனை பேருக்கு உண்டு,தங்கள் நண்பர்களிடத்தில் எத்தனை பேர் விவாதிக்கின்றனர்.......

சாதாரண அடிப்படை விஷயம் இதனால் பிறப்பு ஏற்படுகிறது .அவ்வளவுதான் ........

கற்புநெறியோடு வாழ்வது என்றால் என்ன ?

அப்படி வாழவில்லை என்றால் சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல் என்ன ?

காமம் என்றால் என்ன அதன் அடிப்படை விஞ்ஞானம் என்ன அதை எப்படி முறையாக அனுபவிப்பது ?

பெண்களுக்கும் நமக்கும் உடல் மற்றும் மனதளவில் அறிவியல் முறையில் உள்ள வித்தியாசம் என்ன ?

தாய்மையின் ஆற்றல் யாது ?

இப்படி காமம் குறித்து வினாக்கள் மட்டும் விடைகளோடு விவாதிப்பதில் எதேனும் தவறு உள்ளதா பயம் தன்னை காமுகன் என்று பட்டம் சூட்டி விடுவார்களோ என்ற பயம் .....

எல்லாமே இயற்கையின் விஞ்ஞானம்.இதை புரிந்து கொண்டோ அல்லது புரியாமலோ அதனை போகபொருளாக சந்தைபடுத்தி உள்ளார்கள்.இவற்றை கற்று தந்தால் அவர்களின் வியாபாரம் கெட்டுவிடும் என்பதை நன்கு அறிந்து இன்னும் செயல்பட வைக்காமல் ஆட்சி முறை நடந்து வருகிறது" நான் உலகளாவிய அரசியலை பற்றி சொல்கிறேன்" உள்ளூர் அரசியல் அனைவரும் அறிவர் உலக அரசியல் அரிது மதத்தை மட்டும் அடிப்படையாக வைத்து காமத்தை பாவமாக கருத வைத்து மதம் கலந்த அரசியல் ஆட்டம் ஆரம்பமாகி பல காலம் கடந்துவிட்டது இன்னும் தீர்வு இல்லை அதுதான் அவர்களின் நோக்கம் ..........உலக அரசியல் ஞானம் என்னை விட அதிகம் அறிந்தவர்கள் இத்தளத்தில் அதிகம் உண்டு அவர்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் (நான் அவர்கள் முன்னால் ஒரு தவழும் குழந்தைதான் இருப்பினும் தமிழ் குழந்தை என்பதால் சீற்றம் உண்டு ,கொஞ்சம் சிந்தனையும் உண்டு ).................மதஅரசியல் இதன் போக்கு பல சிதைவுகளை உண்டு பண்ணிவிட்டது இன்னும் செய்யும்..........
*************************************************************************
அடுத்த கேள்வி
பெண்களை ஆண்கள் போகபொருளாக நினைப்பது ஏன் ?
************************************************************************
பெண்களை விளம்பரமாக்கி பல பொருளை விற்கும் விளம்பரங்களை நோக்கி கேட்க வேண்டிய கேள்வி

காமகாட்சிகளை மையமாக வைத்து எடுக்கும் திரைப்பட உலகத்தை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி

எங்கு திரும்பினாலும் பெண்களின் ஆபசம் கலந்த விளம்பர பலகைகள்,இவற்றை பார்த்து கேட்கவேண்டிய கேள்வி

மாடலிங் என்ற பெயரால் அணியும் அரைகுறை ஆடைகள் என்று பலரையும் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி !

நீங்கள் கேட்கலாம் பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா என்று .............நான் முன்பே "பாலியல் " என்ற கேள்விக்கு பதில் கூறினேன் உலக மதஅரசியல் காமத்தை சந்தைபடுத்தி வருகிறது இதற்கு நம் பெண்கள் முதல் இறை- உடையால்.அழகு சாதன பொருளால் ,ஆண்கள் அடுத்த இறை ...........

உடையை கிழித்து அணிந்து அவளை தாய்மையோடு பார் என்று ஒரு ஆணிடம் சொன்னால் அவனுக்கு அவன் தாயின் மீதே வெறுப்புதான் வரும் அதுவும் இந்த கால சமுதாய சூழலில் .

முதலில் மாற்ற வேண்டியது ஆண்களை அல்ல பெண்களையும் அல்ல ......முதலில் நமது கல்வி அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் .பாலியல் கல்வி என்று அதை குறையோடு காணாமல் .கற்புநெறி கல்வி என்று புரிந்த பார்வை வேண்டும் இவ்வுலகத்துகே வேண்டும் ...........பின் தாய்மையின் குணம் ஆண்களுக்கும் தோன்றும் .......பெண்களை மதிக்கும் சமுதாயம்தான் நாம் ....பெண்களை போகபொருளாய் மாற்றியது இடைசொருகல் கண்டிப்பாக நிலை மாறும்......................உங்கள்(பெண்களின்) ஆதங்கம் புரிகிறது ஆவேசத்தோடு சிந்திக்காமல் ஆண்களின் இன்னிலைக்கு காரணம் யாது என்று வெளி வட்டத்தில் வந்து சிந்தியுங்கள் கண்டிப்பாக சமுதாயத்தின் மீதுதான் பாய்வீர்கள் உலக அரசியல்அமைப்புகளின் மீதுதான் பாய்வீர்கள் தனிஒருஆண் மீது குற்றம் சாட்ட மாட்டீர்கள்.............

ஆணாக நின்று இதை பேசவில்லை உங்கள் (பெண்களின் )நிலையை மனதில் உள்வாங்கிதான் இதை எழுதுகிறேன் ............

******************************************************************
பெண்களின் தற்காப்பு குறித்து எழுதுகிறார்கள் பெண்கள் தற்காப்பு கலை கற்க வேண்டுமாம் அதுவும் கண்டிப்பாக .........என் அனபான சமுதாயமே . நம் நவயுக பெண்கள் ஆபாசமற்ற உடை அணிந்தாலே மிக பெரிய தற்காப்பு தானே இதை மட்டும் யாருக்கும் ஏன் சொல்வதில்லை .......
பாரதியின் நோக்கம் பெண்களால் தவறாக புரியபட்டதோ என்றுதான் தோன்றுகிறது ........
பெண் விடுதலை வேண்டும் என்றார் மீசைகவிஞன் அப்படியென்றால் உலக ஞானத்தை அறிந்து கொள்வதில் பெண்களுக்கு இருக்கும் தடை நீங்க வேண்டும் என்பதுதானே..
பெண்களை சமயல் செய்யும் கருவியாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பதுதானே மீண்டும் சொல்கிறேன் சுதந்திரம் என்பது உடையில் இல்லை மனதில்தான் இருக்கிறது .............நாம் வெள்ளையனை பின்பற்றுகிறோம் இதுதான் உண்மை அவன் ஆட்சி இன்னும் இந்தியாவை விட்டு விலக வில்லை அதனால் பாதிக்கபடுவது பச்சிளம்பெண் குழந்தைகள் தான் என்பது என் கருத்து ...............
........நேற்றும் (10-2-13) நெல்லையில் ஒரு 8ஆம் வகுப்பு பெண்ணை மன்னிக்க குழந்தையை சுறையாடிய தற்குறி ஆண்களை பற்றி செய்தி வந்தது இன்னும் நீங்கள்(நவயுக பெண்களே ) சம உரிமை என்ற பெயரை சொல்லி எத்தனை குழந்தைகளின் கற்பை அழிக்க போகிறீர்கள் நல்ல பெண்கள் என்நாட்டில் நிறைய உண்டு அவர்களை சாடவேண்டிய அவசியம் இல்லை ..........நவயுகபெண்களை மட்டும் தான் சாடுகிறேன்
ஆண் மீது நான் சாடவில்லை என்ற ஒரு நோக்கத்தை மட்டும் கருத்தாக வைக்காதீர்கள் ஆண்களை மதிக்கும் ஆணாதிக்க கும்பலை சார்ந்தவன் நான் அல்ல தயவு செய்து கூர்ந்து சிந்தியுங்கள் நம்நவயுக பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்........... *************************************************************************
மாற்று கருத்து இருப்பின் பதியவும் தனிவிடுகையில் வேண்டாம் எனெனில் அனைவரும் தெளிந்து - பாலியல் குற்றமற்ற தேசம் நமக்கு கிடைக்க வேண்டும்.......... ஆகையால் விவாதியுங்கள் பொதுகருத்து தான் ஆதலால் பொதுவாகவே கருத்து பரிமாற்றம் நிகழட்டும்...........ஒன்றை நான் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் மதம் சார்ந்த கேள்வி மட்டும் வேண்டாம் ............அது கருத்தையே குழப்பி விடும் அது எந்த மத அரசியல் எந்த நாடு என்ற கேள்வியும் வேண்டாம் அப்படி தேவை என்றால் தாங்களே முயன்று தெரிந்துகொள்ளுங்கள் தெளிவாக அதுதான் எனக்கு சௌகரியம் அளிக்கும் உங்களுக்கும் தான் .................அரைகுறை ஆடையை பற்றி மட்டும் பேசியுள்ளேன் என்று குறைவாய் இடைபோடுதல் வேண்டாம் ஆரம்பம் அங்கிருந்தும் என்பதை சுட்டி காட்டினேன் ..............பாதிக்கபடும் பள்ளி
பெண்குழந்தைகளின் அவஸ்தையை கருத்தில் வைத்து மட்டும் எழுதியுள்ளேன்..........என் கருத்தை தாய்மை நெஞ்சங்கள் அங்கீகரித்தால் போதும் ...........
************************************************************************
அன்புதோழன்
கார்த்திக்
**********************************************************************

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (12-Feb-13, 4:06 pm)
Tanglish : paliyal
பார்வை : 588

மேலே