என்ன பிடிக்கும்?

எனக்கு...

பூக்கள் பிடிக்கும்...
புத்தகத்தில்
மயிலிறகு பிடிக்கும்...
என் வீட்டு
செல்ல நாய்குட்டி பிடிக்கும்...
தனிமை பிடிக்கும்...
கவிதை பிடிக்கும் ...
இசை பிடிக்கும்...

உனக்கு என்ன பிடிக்கும்?
என கேட்டாய்...

எனக்கு...
உன்னை பிடிக்கும் என்றேன்...

என்
இரு கரங்களின்
விரல்களை
இறுக பிடித்து கொண்டாய்...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (12-Feb-13, 5:56 pm)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
பார்வை : 141

மேலே