கல்விக் கட்டண ரசீது
கள்ள டிக்கெட்டா இது என என்
கண்கள் பார்த்தது - இல்லை இல்லை
கல்விக் கட்டண ரசீது என
கருத்து தெளிந்து குழம்பியது.....
கொடுத்த பணம் 10000 க்கு
கொடுக்கப்பட்ட ரசீது 1000
ஐயா ஒரு சீரோ குறையுது என்றேன்
போயா அப்படித்தான் என்றது பதில்
சரஸ்வதி கைகளில் வீணைக்குப் பதிலாய்
சதுரமான சூட்கேசு கறுப்புப் பணத்தில்
பீசை கட்டி விட்டு கிளாசில் நுழைகையில்
வாய்மையே வெல்லும் என்று
பாடம் நடத்திக் கொண்டிருந்தார்
லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிய
தமிழ் வாத்தியார்......!