வாழ்க பாரதம் வாழ்க பாரதம்
பட்டொளி வீசி பறக்குது கொடி - பாவி மக
படிப்பு வீழ்ந்தது கிடு கிடு படு குழி....!
வெயிலும் அடிக்குது வெந்து கொதிக்குது
வேளைப் பசிக்கு வித்துதான் தீரணும்...
பெத்துப் போட்டவங்க செத்துப் போயாச்சி
பெண் சிறுமி இவ அனாதையா ஆயாச்சி
பிச்சை எடுக்கவும் மனசு வரலே
பிழைப்பு நடத்துறா இந்தியாவுலே
பட்டொளி வீசி பறக்குது கொடி - கண்ணில்
படுது " குழந்தை தொழிலாளர் ஒழிப்போம்" வாசகம்
வாழ்க பாரதம் வாழ்க பாரதம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்.....!!!!