எதிர் பார்க்கின்றேன்...!!!
கனவோடு தான் எதிர்
பார்க்கின்றேன்
இன்னாருக்கு
இன்னார் என்று
எழுதிய என்னவள் தான்
எங்கே போனாள்
இமைகள் கூட
கேள்விக்கணைகளை
தொடுத்துவிட்டு
காத்துக்கிடக்கின்றனவே
காணாத அவள்
வருகைக்காக ஏங்கிக்
கிடக்கின்றனவே...!!!
பாதி வரை
பயணித்தவள்
பாராமல் போனதன்
மாயம் தான் என்னவோ
கட்டிய கூட்டை
கிழித்துச் சென்றதன்
தாகம் தான் என்னமோ
தடுமாறுவது உன்னை
தாங்கிச் செல்லும் பேழையா
இல்லை நீ ஒரு பேதையா...!!!
கோயில் வரை
சென்றுவிட்டு கை கூப்ப
மனமின்றி
கண்ணயர்ந்து
தூக்கம் கொண்டு
வாழ்கையை தேடுகின்றாய்
வானத்தில் பூக்கும்
வண்ண நிலவே...!!!
வசந்தங்கள் பூத்தது
வண்ணங்களாக வீழ்ந்தது
உன் தூக்கத்தில் மட்டும்
மலர்களாக மலர்ந்தது
எதிர் பார்க்கின்றேன்
என்றும் என்னவளாக
பூத்துக் குலுங்குவாய்
புது மலராகவே...!!!