இன்னொரு விதி செய்வோம்....?

இன்னொரு விதி செய்வோம்....?
இங்கே
கயமை கொண்ட ஆண்மகன்
கனவிலும் தவறு செய்ய...
எக்கணமும் தயங்கிட வேண்டும்...!

இன்னொரு விதி செய்வோம்....?
பெண்டீரைக் காத்திட
இன்னொரு விதி செய்வோம்....?
என்ன விதி என்போரே!

பாலியல் வன்கொடுமை
செய்திடும் ஆண்மையை
அப்படியே அறுத்தெறிவோம்...?

பிறந்ததும் பெண் சிசுவை
அழிக்க நினைக்கும் அப்பன்களுக்கு
இன்னொனொரு முறை
அப்பன் ஆகாத நிலை செய்வோம்...?

ஆசிட் வீசும் காதலனா..?
அவன் ஆண்குறியை
அமில கலவையில் மூழ்கடிப்போம்...?

அறியாத பெண் சிறுமிகளை
அநியாயமாய்ச் சீரழிக்கும்
வெறிகொண்ட மனித நாய்களை
வெறிநாயால் கடிக்கவைத்து
வேதனையை உணரச் செய்வோம்...?

என்னய்யா பரிதி...?
இங்கே பெண்கள் எவரும்
தவறு செய்வதில்லையா?
அவர்கள் யாரும்
ஆபாசமாக அலையவில்லையா?
என்று கேட்போரே! நின்று கேளும்!

பெண்களைவிட ஆண்கள்
உள்ளத்தாலும் உடலாலும்
வலிமை கொண்டவர்கள்
இயற்கையின் படைப்பில்
இப்படி ஒரு வேற்றுமை

அனைத்திலும்
ஆளுமை செய்யும்
ஆண் பாலினமே!
அன்னை காட்டிய அன்பை
அவள் இனத்துக்குக் காட்ட தயக்கமா?
அதையும் மாற்றிட
அன்பால் முடியாதா...?

..................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (13-Feb-13, 1:26 pm)
பார்வை : 148

மேலே