நான் பாரதியானால்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
வளர்ந்ததும் இந்நாடே -அவர்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும்
வாழ்ந்ததும் இந்நாடே
சிந்தையில் தோன்றிடும் சம்மதம் யாவையும்
பொதிந்ததும் இந்நாடே -நம்
கந்தலை நொந்தலை துடைத்து
சுகங்களை தந்ததும் இந்நாடே
வளர்ந்திட வளர்ந்திட வளம்பெற வைத்து
வளர்த்ததும் இந்நாடே
வளர்ந்திட வளர்ந்திட வாள்களை கொண்டு
அறுத்ததும் இந்நாடே
இனமென மதமென குலமென
ரணங்களை வளர்த்ததும் இந்நாடே
மடந்தையும் குழந்தையும் பகுப்புகளின்றி
மடிந்ததும் இந்நாடே
காளைகள் ஏழைகள் சோலைகள் மொத்தமும்
அழித்ததும் இந்நாடே -நம்
தமிழ் இனம் மொத்தமும்
தணித்திட தவித்திட
வைத்ததும் இந்நாடே
தனஞ்சன்