எழுது ...எழுது ...எழுது....
எழுது ...எழுது ...எழுது....
எழுந்திட வேண்டும்.. எழுது!
விழுதாய்.. உலகை.. ஆக்க..
விருட்சம் ஒன்றாய் ..எழுந்து நிற்க..
எழுது...எழுது...எழுது...
காதல் என்பதும் வாழ்க்கைதான்...
கடமையும் இருக்கு உள்ளேதான்...
மோதல் என்பதும் நடக்குந்தான்..
முழுமை காண வேண்டாமா?
தேடல் இல்லா வாழ்கயில்
தேவைகள் மட்டும் கூடிநிற்கும்,
தேடத் தொடங்கி நடந்து வந்தால்..
தேவைகள் அங்கே ஓடிவிடும் !
நிழலும் வெளிச்சமும்
இருப்பதுபோல்..
வெயுளும் மழையும்
படர்வது போல் ..
வாழ்வின் பயணம் அமைந்திருக்கும் !
உயரம் தேடும் நேரத்திலும் ,
உலகம் போற்றும் காலத்தலும்
உதவிய மனங்களை மறக்காமல்
உள்ளம் இருக்க செய்திடுவாய்..!
உணர்ந்த்ததை எழுத்தில் பதிந்திடுவாய்..
எழுது...எழுது..
இனிமைகள் மலர எழுது!
நாட்டைக் குறித்து எழுது..
நட்பைக் குறித்து எழுது...
தேடல் குறித்து எழுது..
உன் தேவை குறித்து எழுது..
எழுதும் தேவையை எழுது..
அது
இதயம் நிறைக்க எழுது..!