காதலினால் வருவது என்ன?

பூ கொடுத்து வரவேற்பது காதல்
அந்த பூக்களை மலராக தொடுத்து கல்லறைக்கு
அனுப்புவதும் காதல்
காதல் சிலருக்கு போதை
பலருக்கு தீராத சோகம்
கடலை விட ஆழம் அதிகம்
கொஞ்சம் தவறினால் போகலாம் சொர்க்கலோகம்
கொஞ்சம் இனிப்பு
மிஞ்சியவை யாவும் கசப்பு
பருகும் தண்ணீரில் இருப்பது
சுவை
காதலித்து பார் உணர்வாய்
கண்ணீரின் அருமையை
காதலிக்கும் போது இனிமை
பிரிந்தால் உனது நிலை தனிமை
உணரு உணர்ந்து
பிறரை நினைந்திடு
நினைத்தவரை அடைந்திடு
காதலை வெல்வாய்
காவியம் சொல்வாய்.
பூவின் உருவம் சிறிதுதான்
அதன் மனமோ அதிகம்
காதலிப்பார் காலம் சில ஆண்டு
காதலுக்கு அழிவில்லை
காதல் புனிதமானது

எழுதியவர் : ப.அய்யனார் (14-Feb-13, 1:42 pm)
பார்வை : 110

மேலே