வாழ்க ....அவன் !

கோவிலுக்கு செல்லும் போதெல்லாம்
என் வறுமையை சோதித்த
பணக்காரன் .....

இரக்கத்தை குரலில் தவழவிட்டு
என் இதயத்தை நோகடித்த
மோசக்காரன் .....

அப்பாவிடம் திட்டு வாங்கி ,
அம்மாவிடம் நான் பெற்றிட்ட
அஞ்சு ,பத்தை ,.அப்படியே அபகரித்த
வேசக்காரன் ....

என்னைப் போல் ....
அரியர்ஸ் அதிகம் வைக்காமல் ..

கல்லூரிக் கட்டணம் செலுத்தாது
கவித்துவமான வார்த்தைகளால்

காசுகள் பெற்றிட்ட புதுவித
புத்திக்காரன் ......

அன்று என் தீனிக்கான காசுகளை
தினமும் பெற்றிட்ட யுத்திக்காரனை .....

சந்தித்தேன் நான் !
சட்டென்று நேற்று !

வட்டிக்கு பணம் வாங்க
வண்டியை அடகு வைக்க சென்ற போது!

வாய் வழியே கெஞ்சிக் கெஞ்சி
கேட்பவனாக அல்ல .....

வட்டிக்கு பணத்தை எண்ணி !எண்ணி !
கொடுப்பவனாக !

வழிகள் வேறு ஏதுமின்றி
வாங்கி வந்தேன் நான் ....
வலிகளுடன் .....

அன்று ,சில்லறை ,சில்லறையாய்
நான் கொடுத்த காசுகளை .....



வாழ்க எங்கள் ஊர்
பிச்சைக் காரன் !!!
(மன்னிக்கவும் உயர் திரு வட்டிக் காரன் !)

எழுதியவர் : ராஜேஷ் ப (15-Feb-13, 3:04 pm)
பார்வை : 286

மேலே