மாநகர வாழ்க்கை
சுவையான தேநீர் தந்து அன்பாய் எழுப்பிடும்
அன்னையின் முகம் காணும் நேரத்தில்...
கைபேசியின் அலற வைக்கும் அலார ஓசைக்கேட்டு எழுகிறோம்...
அன்பாய் பரிமாற அன்னையும் இல்லாமல்
உடனமர்ந்து உண்பதற்கு சகோதர சகோதரிகளும் இல்லாமல்...
அவசரமாய் பரிமாறிடும் வேலையாள் தந்த உணவை அரை வயிறு நிரப்பி...
அடுத்த நொடி பணிக்குப் புறப்பட்டோம்...
வேலையின் இடைவேளை நேரங்களில்
மனம் செல்கிறது....
சொந்த ஊரை நோக்கி
பந்த பாசங்களைத் தேடி....
பணிமுடித்தபின் இளைப்பாறும் இனிய மாலைப்பொழுதும் இனிக்கவில்லை...
ஆருயிர் நண்பர்களுடன்
அமர்க்களமாய் அரட்டை அடிக்கும் நேரங்களும் அறிமுகமில்லாத முகங்களின் அவசியமற்ற உரையாடல்களைக் கேட்கும் அவதிப்பொழுதுகளாய்க் கடந்திட...
உள்மனத்துக் கவலைகளைப் பகிர்ந்திட ஆளின்றி மனம் ஊமையாய் அழுகின்றது....
வேலைக்கே செல்லாவிட்டாலும் வமிறு நிறைந்தது வீட்டில்....
இங்கோ...
வேலை செய்தாலும் தண்ணீர்தான் உணவு
மாத இறுதி நாட்களில்...
பசிதீர்க்க பணம் இல்லாததால்....
நாளை என்னும்
வேளையிலே வளமாய்
வாழ்ந்திடவும்...
ஆடம்பரமாய் வாழ்ந்திடும் எங்கள் மகிழ்ச்சி முகம்
காணத் துடித்து...
ரத்தத்தை வியர்வையாய் சிந்திய அன்புத்தாய்-தந்தையரின் வாழ்நாள் ஆசைகளை நிறைவேற்றிடவும்...
மாநகரமெனும் மாநரகத்தில்...
மன ஓய்வின்றி உழைக்கிறோம்....
அத்தனையும் சகித்துக்கொண்டு...
சவால்களை சந்திக்கிறோம்...
தினந்தோறும்....
எங்கள் கனவும் நனவாகிட.....!