உபசார நாள் கவிதை

தன் கூட்டினிலே இருந்து
தன்னை முழுமையாக
வலுப்படுத்திக்கொண்டு,
அக்கூட்டைவிட்டு
வெளிவரத்துடிக்கும்
ஒரு பட்டாம்புச்சியின்
மனநிலையோடு,
என் முன்னால் வீற்றிருக்கும்
அருமை தோழர்களே,
உங்கள் அனைவருக்கும்
என் பணிவான வணக்கங்கள்...

இந்த வருடம்
உங்கள் அனிவரின்
வாழ்க்கைகளை
வலமாக மாற்றும்
மாற்றங்கள் பற்றபல
பிரவேசிக்க,
அம்மாற்றங்களை
மாபெரும் வெற்றிகளாய்
மாற்றும் மனத்தன்மை
உணகளுக்குள்
துளுதிருக்க,
வேகமாக நடைபோட்டுக்
கொண்டிருக்கும் நீங்கள்,
கிட்டத்தட்ட மறந்திருக்கக்கூடும்
உங்கள் நட்பின்
பிரிவை பற்றி....
பாரி வல்லலனதால்தான்
முல்லைக்கு தேர் கொடுத்தான்,
அதுவே
அவன் நண்பனாயிருந்திருந்தால்
முல்லைக்கு தன்
தொல்கொடுதேந்தியிருப்பன்.....
இப்பள்ளி பருவதினிலே
தொல்கொடுதேந்திய
நட்புக்களைப் பற்றி
நினைத்துப் பார்க்கும்
நேரம் இது....
சின்னச்சின்ன சண்டைகள் - அதற்கு
சிலிர்த்துக்கொண்ட கோபங்கள்,
சில்லறை பிடிவாதங்கள் - பின்
சிரிப்புடன் சமாதானங்களாய்
நிறைந்த உங்கள் நட்பு,
வகுப்பில் செய்த குறும்புகளால்
வருத்தப்பட்ட நாட்கள்,
ஆசிரியர் அசதியாய் அமர்ந்தபோது
ஆரம்பமான அரட்டைகளாய்
நிறைந்த உங்கள் நட்பு,
தென்றல்த்தாகிய இல்லை போல,
மார்கழிக்காலை பனி போல,
தயங்கி மறையும் நிலா போல,
உலா போகும் மேகம் போல,
வளர்ந்து தேயும் பிறை போல,
சுமுகமாய் பிரியும் நேரம் இது....
இந்நேரத்தில்
உங்கள் நண்பர்களால்
விளைந்த நன்மைகளுக்கு
நன்றி என்ற ஒரு சொல்
ஈடுகொடுக்க முடியாவிடினும்,
உங்கள்
கருவிழி கரையோரம்
கசியும் கண்ணீர்த்துளி
அச்செயலை செய்யக்கூடும்
என்ற வாக்கியத்துடன்
எதிர்வரும் தடைகளை
தகர்த்தெறிய கார்த்திருக்கும்
என் அருமை தோழர்களே
உங்கள்
முன்னேற்ற முயற்சிகள்
அனைத்தும் வெற்றியில் முடிய
என் மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்!....

எழுதியவர் : தினேஷ் குமார் (15-Feb-13, 11:04 pm)
சேர்த்தது : Tinesh Kumar
பார்வை : 620

மேலே