[400] மீட்சியைக் கொடையாய்த் தாரும்..! [அறுசீர் விருத்த வகையைச் சேர்ந்தது]

ஏசு வே!என் அப்பனே!
===எம்மை யாளும் பெருமானே!
நாசப் பாவம் அறுப்போனே!
===நல்லாம் வழியைக் காட்டிடுமே!
நீசன் என்னை ஆளுவையோ?
===நினைப்பின் பாவம் மீளுவனோ?
தேச னே!என் பலம்,நீரே!
===தேவை யறிந்த பலவானே!==01

செய்வ தெல்லாம் பாவமேனச்
===சிந்தை சொலினும் கேளேனே!
பொய்ய னாக முன்,நின்று
===புரட்டு செய்யும் கையேனே!
மெய்ய ரோடும் எனைக்,கூட்டி
===மேலும் வளர வைப்பீரே!
உய்ய வென்றே என்பாவம்
===உமது தலைமுள் முடியாமே!==02

போர்,ஏ றாய்,அச் சாத்தானின்
===பொல்லாக் கையின் பிடிவிட்டு
நீரே யன்றி யார்காப்பார்?
===நினைவில் செயலில் துணைவாரும்!
வார்,ஏ றிளம்பெண் கருவறையை,
===வந்து பிறந்து விளக்கினையே!
சீரே காட்டி எனை,உயர்த்திச்
===செம்மை யாக்க வாரீரோ?==03

உலவாக் காலத் துள்,எண்ணி
===உலகம் எல்லாம் படைத்தோயோ!
பலவாறு எங்கள் பயனுக்கே
===படைப்பை எல்லாம் தந்தோயே!
மலமாம் பாவம் குழிவீழ்ந்தோம் ;
===மறந்தோம் ஏதேன் வாழ்வினையே!
அலகான் கையில் பாவையென
===ஆனோம் அனைத்தும் கெடுப்போமே!--04

கோனே! உந்தன் திருஉள்ளக்
===குறிப்பை விலக்கி வீழ்ந்தோமே!
தேனே விட்டு மலமொய்க்கும்
==திறனில் ஈக்கள் ஆனோமே!
ஊனே கூட்டும் இவ்வாழ்வை
===உன்னை விட்டுப் பெரிதாக
ஏனோ எண்ணி மதிகெட்டோம்!
===எல்லாம் அழித்து வாழ்கின்றோம்! ===05

உடையான் உன்னை எமதாக்கி
===உலவி வந்த நாட்களினை
அடைவோம் என்றும் நம்பிடவோ?
===அதற்கென் செய்யப் போவோமே!
தடையாய் எமது பாவம்,உள
==தாமே வந்து மீட்சிதனைக்
கொடையாய்த் தந்து மீட்பீரோ?
===குறியே! வழியே! கொற்றவனே! ===06

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (15-Feb-13, 3:49 pm)
பார்வை : 90

மேலே