மொட்டுக்கள் பூத்துவிட்டால்!

பூத்த உடனே
கொய்யப்படுகின்றன
இந்த பூக்கள்...

வண்டுகள் தேன் குடிக்க
அமர்ந்த போதுதானே
வந்தன இந்த மொட்டுக்கள்...

பூக்காமல் தடுக்க வேண்டும்

என்ன செய்தாய்...
மருந்தடித்து கொன்றாய்...

மொட்டுக்கள் பூத்துவிட்டால்,
என்ன செய்வது...

கொய்யத்தானே வேண்டும்...

சூடு ஆறும் முன்னே
சேத்துக்குள் புதைத்தாய் ...
தண்டுடன் முறித்து
குப்பைக்குள் போட்டாய்..
இதழ்களை பித்து
பற்றைக்குள் வீசினாய்..

சபாஷ் மனிதா...

நீ யார்
உன்னால் எது முடியாது..
செடி வைத்தது நீ..
நீருற்றி வளத்தது நீ...
வண்டுகளும் நீ,,,
மொட்டுகளும் நீ...

பூக்களை பறிக்கவா
யோசிக்க போகிறாய்...

எழுதியவர் : -தமிழ்நிலா- (16-Feb-13, 9:38 am)
பார்வை : 116

மேலே