என் எண்ணங்கள்
என் எண்ணங்கள்
...............................
என்னை அறிந்தும்
என்னை ஏமாற்றுகிறாயே...
உன்னை உணராமல்
உன்னோடு நான்..
ஆமையாய் என் செயல்
முயலாய், முன்னே நீ...
நீ நுழையும் இடம் தெரிகிறது!
கடந்த வழி தெரியவில்லை...
கண்ணொளிக்குள் உன் தடயம்...
காணாமல் போனதினால்....
காலாவதியாகிறது என் பயணம்...
விண்னைத் தொடுகிறாய் நீ ஒரு நொடியில்..ஆனால்!
உன் தடயம் கிடைக்கவில்லை..!
ஒருகால தவநிலையில்....
நீ காட்டும் தடயங்கள்...என்னில்
நீரின்மேல் போடும் கோலங்கள்...
எதுவுமே தடயம் இல்லை.....
நீ சென்ற இடம் புரியவில்லை......
வீ ணாய் என்னை அலைகழித்து..
ஆனந்தம் கொள்வது சரியென்றால்...
இனி நானும் உன்னை....
சவாலாக ஏற்க்கின்றேன்....
என் செயல்களினால்..
உன்னை பின்ன வைப்பேன்...
என் செயல்களுக்குள்ளே...
உன்னை சிறை வைப்பேன்....
முடிந்தால் நீ...!
என்னை விட்டு.......
முன்னோடப்பார்.......