அரசு அலுவலர்கள் குறித்த ஒரு பதிவு...

இணையத்தள நண்பர்களுக்கு வணக்கம்….
அரசு அலுவலர்கள் குறித்த ஒரு பதிவு

1. இந்த உலகின் மிகச்சிறந்த நடிகன் ஒருவன் உண்டெனில் அது அரசுப்பணிக்கு சேரத்தயாராக இருப்பவர்தான்.
2. எந்த ஊரில் எந்த மாநிலத்தில் எந்த தீவில் வேலை பார்க்கவும் நான் தயார்…என்பது அவர்கள் வேலைக்கு சேரும் முன் பேசும் அசத்திய வார்த்தை.
3. பணியில் சேர்ந்த அடுத்த மாதமே…வயதான பெற்றோர்… இளமையான மனைவி… வருங்கால குழந்தை எல்லோரும் ஞாபகத்திற்கு வந்துவிடுவர்.
4. குடும்ப நோய் வந்தபின் அவரின் வேலையால் நிர்வாகத்திற்கும் பயன் இருக்காது…மக்களுக்கும் பயன் இருக்காது.
5. வெள்ளிக்கிழமை மதியம் புறப்படுவார்…திங்கள் கிழமை மதியம் தான் வருவார்..இடைப்பட்ட நாளில் முடிந்தால் வேலை வாங்கிக் கொள்ளலாம்…அவரும் தெரிந்தால்தான் செய்வார்.
6. இவர்கள் மாதாமாதம் கொடுக்கும் பணிமாறுதல் மனுக்களை பரிசீலிக்க தனி அலுவலரே தெவைப்படும்.
7. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏன் அரசு பணியாளரின் பணி மறு ஆய்வு செய்யப்படுவதில்லை?
8. மறு ஆய்வு மூலம் பணி நீக்கம் செய்யாவிட்டாலும்…ஊதிய உயர்வு…பதவி உயர்வு ஆகியவற்றை நிறுத்திவைக்கலாமே?
9. எங்காவது ஒரு அரசு ஊழியர் பொதுமக்களிடம் அன்பாக வரவேற்றதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் என் நாத்திகக் கொள்கையை விட்டுவிட்டு அவரையே தெய்வமென்று வணங்க ஆசைப்படுகிறேன்.

இன்னும் பேசலாம்….

எழுதியவர் : யுவான்சுவாங் (16-Feb-13, 11:10 am)
பார்வை : 176

மேலே