விழிப்புணர்வு உண்மை கதை ஒன்று பகுதி 1

yahoo messenger என்கிற வலைதளத்தில் திரைப்பட கற்பனைகளையும் தாண்டி நடந்த உண்மை சம்பவம்

வலைதளங்களில் மகிழ்ச்சியாய் பறந்து திரியும் என்போன்ற நண்பர்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக அமையும் என்ற எண்ணத்தில் தொடர்கிறேன்

அச்சமயம் நான் என் தமிழகத்தையும்,இந்திய நாட்டையும் விட்டு வெகுதுரத்தில் வேலையின் காரணமாக தங்கி இருந்தேன்

புதிய நாடு,புரியாத மொழி என ஆங்கில படத்தை இடைவேளைக்கு பிறகு பார்ப்பவனை போல் விழி பிதுங்கி கொண்டு இருந்த நேரம்

சாதாரணமாக தமிழன் பேசலேனா செத்துடுவான்னு
சொல்றது உண்மைன்னு புரிய வச்ச பயணம் இது

தமிழ் பேசவேண்டி,தமிழ்கேட்க வேண்டி ஏங்கி தவிச்ச
நேரத்தில் இவ்வலைத்தளம் எனக்கு வரமாக அமைந்தது

அறை போட்டு சிந்தித்து a_naveen soft_withgodgrace என்று எனக்ககாய் முகவரியை தேர்ந்தெடுத்து
இவ்வலைதளத்தில் வலம் வர தொடங்கினேன்

yahoo messenger பற்றி சிறு குறிப்பு

எல்லா நாட்டுக்கும் என தனி தனி அறைகள் உண்டு
நாம் எந்த அறைகளில் வேண்டுமானாலும் நுழையலாம்
நுழைந்த அறைகளில் பேசுவதை கேட்கலாம்
நாமும் பேசலாம் ,எல்லோருக்கும் தெரியும் படி எழுதலாம்
நண்பர்கள் மட்டும் தமக்கென தனி அறைகளை உருவாக்கி கொள்ளவும் முடியும்
தனியாய் இரு நபர்கள் மட்டும் பேசலாம் எழுதலாம்
பார்த்தும் கொள்ளலாம் என பல அற்புதமான விஷயங்களை உள்ளடக்கி உருவாக்க பட்ட வலை தளம் இது

சரி சரி விஷயத்துக்கு வரேன்

நான் தமிழக அறைகளில் வலம் வர தொடங்கினேன்

நாளடைவில் 1000 க்கும் மேற்பட்ட நண்பர்களை இவ்வலைதளம் எனக்கு வரமாக அளித்தது

அதில் 100க்கும் மேற்ப்பட்ட நண்பர்கள் மிகவும் நெருக்கமானோம்

ஒருவன் இந்தியாவில் மற்றொருவன் அமெரிக்காவில்,இன்னொருவனோ வளைகுடா நாட்டில் என வெவ்வேறு இடங்களில் வசித்து வந்ததால் (எல்லோரும் தமிழர்கள்) உலக விஷயங்களை உடனுக்குடன் தெரியும் வாய்ப்பு எனக்கு கிட்டியது

எல்லா விஷயங்களையும் பற்றி பேசி ஆய்வு நடத்தவும் ஒரு சிறந்து ஆராய்ச்சி கூடமாய் இத்தளம் எனக்கும் என நண்பர்களுக்கும் அமைந்தது

நேரத்தை முன்கூட்டியே தீர்மானித்து அணைத்து நண்பர்களும் ஒரே சமயத்தில் உட்கார வசதி செய்துகொண்டோம்
ஒரே கேலியும்,கூத்தும்,பாட்டும்,கவிதையும்,
பட்டிமன்றமும்,கொண்டட்டங்களும் பகிர்வுக்களுமாய், நகர்ந்து கொண்டு இருந்தது எங்கள் பயணம் நெருக்கமான நண்பர்கள் தொலை பேசி என்னையும் விலாசங்களையும் பகிர்ந்து கொண்டோம்

நாடு திரும்பும் நண்பர்களை சென்னை விமான தளத்தில் வர வேற்று உபசரித்த சென்னை நண்பர்கள்

வெளி நாட்டில் இருந்தபடி தமிழக நண்பர்களுக்கு காசோலை அனுப்பி முதியோர் இல்லங்கள்,குழந்தைகள் காப்பகங்கள்,
மாற்று திறனாளிகள் என தேடி தேடி உதவி செய்த செய்து கொண்டிருக்கும் நண்பர்கள்

பிறந்தநாளை online ல் கொண்டாடி கொண்டிருந்த
ஒரு சொர்க்க சுழல் அது

இப்படியாய் நகர்ந்த பொழுதுகள் சோககடலில் மூழ்க போவதாய் உணராமல் உற்சாகமாய் கொண்டாடிக்கொண்டு இருந்தோம்

சிங்கப்பூரை வசிப்பிடமாக கொண்ட பெண் ஒருத்தி படிக்க வேண்டி தமிழகம் வந்திருக்கிறாள் அவளோடு என் yahoo messenger நண்பன் காதல் வயப்பட்டு விட்டன அவளும் இவனை காதலிப்பதாய் சொல்லி இருக்கிறாள் இவன் வீட்டுக்கும் போய் இருக்கிறாள் என நண்பனின் பெற்றோர்களை அத்தை மாமா என ஆசையாய் அழைத்து அவர்களுக்கும் இவளை பிடிக்கும் படி செய்து விட்டால்

என நண்பன் கணினி சம்மந்தமாக பட்டம் வென்றவன்
அவன் தந்தையோ ஏழை விவசாயி வீட்டுக்கு ஒரே மகன்

இவள் படிப்பு முடிவுக்கு வர சிங்கப்பூர் சென்று தன் பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி கொண்டு உன்னை சிங்கபூர் அழைத்து திருமணம் செய்து கொள்வதாய் சத்தியம் செய்து விட்டு சென்று விட்டால்

நாட்கள் நகர்ந்தன மூன்று ஆண்டுகள் கழிந்தன
இம்முன்றாண்டுகளும் messenger ல் மட்டும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள் இவர்கள்

இவன் அவளோடு கற்பனையில் வாழவே தொடங்கி விட்டான்

..........................,,,,, தொடரும்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (16-Feb-13, 2:31 pm)
சேர்த்தது : a.n.naveen soft
பார்வை : 215

மேலே