கண்ணீர் துளிகளின் ஆதரவு !!!
முகம் காணாத என்
நண்பனின் முகம் காண
குளத்தில் பூத்திருக்கும்
செந்தாமரை மலராக
பூத்திருந்தது -என் இதயம் !!!
நண்பனின் வரவை
எண்ணி அதிகாலையில் !!!
சூரியனின் வரவுக்காக
காத்திருக்கும் சூரியகாந்தி
மலராக காத்திருந்தது
என் நட்பின் இதயம் !!!
நண்பனிடமிருந்து வரமுடியவில்லை
தோழி உன்னை காண
என்ற செய்தியை என்
செவிகள் கேட்டவுடன்
பட்டு போன மலராகி விட்டது
என் இதயம் !!!!
அழ மனமில்லை -என்
நட்பை கண்ணீராக கரைக்க !!!
வலிகள் இதயத்திற்குள்ளே
குடி கொண்டது !!!
நண்பனே நம் நட்பின் நினைவுகளை !!!
கலக்கியது உன்னை காணாத
விழிகள் மட்டுமல்ல !!!
நம் நட்பின் நினைவாய்
துடித்துக்கொண்டிருக்கும்
இவள் இதயமும் தான் !!!
ஆறுதல் சொன்னது-என்
கண்ணீர் துளிகள் !!!
உன்னை காண உன்
நண்பன் வருவான் என்று !!!
வருடங்கள் பல சென்றாலும்
காத்திருப்பேன் -நம் நட்பின்
நினைவுகளுடன்-நண்பனே
உன் முகம் காண !!!