அழகிய ஒரு கிராமத்துப் பயணம்
அழியாம தேங்கி நிக்கும் கிராமத்து இளமை
நினைவுகள் அது ஒரு அழகிய நிலாக் காலம்
இலங்கை வரைபடத்தில் தெரியாத ஒரு புள்ளி
பன்னமூலை நான் பிறந்த கிராமம் என் வாழ்க்கை பூப்பூத்த வேர்ப்பகுதி பன்னமூலை
சுற்றிலும் கண்களை கவர்ந்த பல சின்னஞ்சிறு கிராமங்கள் மையப்பகுதியில் பனிப்புல அம்மன் ஆலயம் இருப்பவர்ரெல்லாம் ஓரினம் பார்ப்பவர் முகத்தில் எல்லாம் சந்தோசம் வசதியும் வறுமையும் நீராடி இருந்தாலும் ஒற்றுமைக்கு இலக்கணம் எங்கள் கிராமம்
சில தூரம் நடந்துகடந்தால் வரும் செழித்து விரியும் இயற்கை அதிரை செல்லும் எங்கள் ஊர் வயல் வெளிகள் இவ்வூரின் எல்லையில் அய்யனார் கோவில் ஊரின் நினைவுகளைச் சுமந்தபடி
நிழற்படமாய் பரந்த முகத்துடன் காவல் நிற்கிறார்
எங்கள் கிராமத்தை காக்க
இன்னும் சில வினாடிகள் நடந்துகடந்தால் வரும்
நெஞ்சினை உருகவைக்கும் திருவடிநிலை எங்கள் சுடுகாடு சுட்டெரிக்கும் சிவப்பு சூரியன் கடலுக்குள் மூழ்கி வானில் நீந்தி தாண்டவம்மாடும் இடம் திருவடிநிலை
நாங்கள் இரண்டு தலைமுறைகளாய் விளையாடித்திரிந்த புளியமரம் பழைய நினைவுகளை
சுமந்தவண்ணம் கேட்டால் இப்பவும் சொல்லும் கேட்பதற்குத்தான் யாரும்மில்லை
கிராமத்தின் வாழைமர இலையில் சாப்பிட்டது வெறும் சோற்றை மட்டுமா இலைகளில் இருந்த மண் சத்தையும் சேர்த்துத்தானே அறுநாக்கயிறில் தையல் பிரிந்த கால்ச்சட்டையை இறிக்கிக்கட்டிக்கொண்டு ஓடிய சிறார்கள் புளிய மரத்தடியில் விழுந்து முழங்காலுக்கு தடவியது மருந்தல்லவே அந்த மண்ணை அள்ளித்தானே
விடியலிலே வீட்டை சுத்தப்படுத்தி வாசலில் துளசிச் செடி அருகம்புல் வைத்து மாட்டு சாணியால் முத்தம் தெளிக்கும் சத்தம் கேட்கையில் தீண்டி
எழிப்பியது அந்த புழுதியின் வாசம் தானே
அலங்கரித்த மாடுகளும் மாட்டு சலங்கை சத்தமும்
பசுவை அழைக்கும் கன்றின் சத்தம்
புழுதியில் புரண்டு விளையாடிய வீதிகள்
விளையாட்டிற்காக காத்துநிற்கும் புளியமர நிழல்
வீட்டின் முத்தத்தில் தானாகவந்த விழாத்திமரம்
ஏதோஒன்றை தொலைத்தது போல் விழிகளின் மேல் கண்ணீர்
பழைய மண்திண்னைகள் சீமந்து தளங்களாகி விட்டன மகிழ்ச்சி தான் ஆனால் மண்திண்னையில் கூடிய சந்தோசங்கள் சீமந்து திண்ணையில் காணவில்லையே
வீட்டுக்கு வீடு வரவேற்ப்பு அறையில் கணணிகளும் தொலைகாட்சி சாதனங்களும் வளர்ச்சிதான் ஆனால் நடைமுறை உறவுமுறைகளும் நாடகங்களாகி விட்டன
இன்று எங்கள் கிராமத்தில் அலங்காரங்கள் இல்லை அடையாளங்கள் இல்லை அர்த்தங்களும் இல்லை
பல ஆண்டுகள் கழித்து என் ஊரை பாற்கையில் நெஞ்சுக்குள் மணிச்சத்தம் எவ்வளவுதான் உழைத்தாலும் எப்படித்தான் இருந்தாலும் ஊரை விட்டுப் பிரியும்போது கனக்கிறது கனக்கிறது பெட்டியல்ல பைத்தியக்கார மனசு