கவியரசர் காதில் விழுந்ததோ.....?
காலங்களில்......?
அவள் கோடைகாலம்
அதுவும் கத்திரி வெயில்காலம்
(அவள் அருகில் வந்தாலே
பத்திக்கிட்டு எரியுது.
வேர்த்துக்கொட்டுது.)
கலைகளிலே....?
அவள் கவிதை
அதுவும் காதல் கவிதை
(எத்தனை முறை படித்தாலும்
ஒர் எழவும் புரியல
படிக்காமல் இருக்கவும் முடியல)
மாதங்களில்.....?
அவள் மார்கழி
இது மட்டும்தான் உண்மை
(விழித்ததிலிருந்து
தூங்கும் வரை.....
அம்மா...தாயே ..பஜனை!)
மலர்களிலே...?
அவள் குறிஞ்சி!
அதுவும் அரிய குறிஞ்சிப்பூ!
(காத்திருந்தால் கிடைக்கும்
கம கம மணமும்
இணிக்கும் தேனும்)
பறவைகளில்....?
அவள் கழுகு!
அதுவும் கூர்கண் கழுகு!
(எந்தத் தவறை மறைத்தாலும்
அந்தத் தவறை அறிந்துகொள்ளும்
அப்படியொரு பார்வை)
பாடல்களில்.....?
அவள் முகாரி!
அதுவும் பெரிய புகாரி!
(எங்க வீட்டு ஆட்கள் மீது
எப்போதும் புகார் படிப்பது
ஏன்? என்றால் முகாரி பாடுவது.)
(யோவ்...பரிதி! நிறுத்து.
உம்பாட்டுக்க எம்பாட்டக் கெடுக்கிற..?
நல்ல ஆளுயா....நீ!
சினிமாவில்தான் என் பாட்ட
காப்பிக் குடிக்கிறாங்கனா...?
கவிதையில நீ டீ குடிக்கிற...
பெண்டாட்டிய கடிக்கிற
உன் வீட்டு முகவரியைக் கொடு
முகரக்கட்டையைப் பிய்ய வைக்கிறேன்...
அது சரி....பரிதி! ஒண்ணா..இரண்டா..மூனா
எத்தன வீடு வச்சிருக்க.....
எல்லா வீட்டு முகவரியையும் கொடு.)
அய்யயோ...என் கோமாளிப்பாட்டும்
கவியரசர் காதில் விழுந்ததோ.....?
மன்னிச்சுக்குங்க...கவியரசரே!
உங்கள் காலத்தை வென்ற...
காலங்களில் அவள் வசந்தம் பாடலை
கேட்கக் கூடாத நேரத்தில் கேட்டுவிட்டேன்
கோபத்தில் நானும் குதறிப் பாடிவிட்டேன்...
ஒரு வீட்டில்தான்
ஓரமாய் ஒண்டிக் குடித்தனம்..
இதுவும் அவளுக்குத் தெரிந்தால்
ஆண்டிக் குடித்தனம்
இல்லை எனக்கும் இவளை விட்டால்.....)
.....................................பரிதி.முத்துராசன்