விழிப்புணர்ச்சி உண்மை கதை ஒன்று பகுதி-2
இத்தருணத்தில் தான் இவன் எங்களோடு நண்பன் ஆனான் அப்பெண்ணையும் எங்களுக்கு yaahoo messenger -ல் அறிமுகம் செய்து வைத்தான்
அவள் நாட்கள் கடத்திய வண்ணம் இருக்க என் நண்பனுக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கிற்று
சிங்கப்பூரில் பணிபுரியும் நண்பன் ஒருவனை தொடர்பு கொண்டு அவள் அளித்த விலாசத்தில் விசாரிக்க அனுப்பி வைத்தோம்
விசாரித்த பின்தான் அந்த அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது
அவள் தமிழகத்தில் இருந்து திரும்பிய உடனே திருமணம் செய்து கொண்டால் என்பதும்
அவளுக்கு 1 வயது குழந்தை உள்ளது என்றும்
விசாரித்த நண்பன் தெரிய படுத்தினான்
அந்தசமயம் பாதிக்க பட்ட நண்பனும் அவ்வறையில்
இருந்தான்
இதை கேட்டுடவுடன் அதிர்ந்து போன அவன் mic -ல்
கதறி அழுதான் என்னை பார்ப்பது இதுவே கடைசி முறை என்னை மன்னித்து விடுங்கள் என கூரி messenger - ய் விட்டு வெளியேறி விட்டான்
விஷமும் அருந்தி விட்டான்
பதறிப்போன நானும் நண்பர்களும் செய்வதை அறியாது முழித்தோம்
நல்ல வேலையாக அவன் வீட்டு தொலைபேசி என் எங்களிடம் இருந்தது
உடனடியாக அவன் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொன்னோம்
அவர்களும் அவனை தக்க சமயத்தில் மருத்துவ மனை அழைத்து சென்று உயிரை காப்பாற்றி விட்டனர்
ஆனாலும் அவன் முழுமையாக குணம் அடையவில்லை
அவனின் மனநிலை பாதித்துவிட்டது
இப்பொழுது மன நோயாளியாய் நண்பன் வாழ்கையை தொலைத்து
அந்த கள்ளம் கபடம் இல்ல ஏழை பெற்றோர்கள் கனவும் கலைந்தது
இவளோ குற்ற உணர்வே இல்லாமல் வலை தளத்தில் வேறு ஆன் நண்பர்களோடு உலா வந்து கொண்டு இருந்தால்
இச்சம்பவத்தால் பாதித்த நானும் என் நண்பர்களும்
messenger விட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டோம்
சமிபத்தில் messenger main அறைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது என அறிந்தோம்
கத்தி பழங்களை நறுக்கி பகிர்ந்து உண்ணவும் பயன் படுத்தலாம்
ஒருவனை கொலை செய்யவும் பயன் படுத்தலாம்
அது பயன் படுத்துபவனை பொறுத்தே அதன் பயன் பாடும் இருக்க
கத்தியை குறை சொல்லி என்ன பயன்
நண்பர்களே உலகில் உள்ள அனைத்து பொருள்களிலும் நன்மையையும் தீமையும் ஒருங்கே உள்ளது அதில் தீயவற்றை தவிர்த்து
நல்லவற்றை அடையாளம் கண்டு பயன் பெறுங்கள்
வாழ்க வளமுடன்