மணம் மறுத்த மருத்துவச்சி

பாசப் பட்டுடுத்தி,
பட்டாடை நீயுடுத்தி,
வைத்த விழியனைத்தும்,
விலகாமல் நிலை நிறுத்தி,

தைத்து நின்ற நெஞ்சங்களைத்
தாங்கி உடன் நடத்தி ,
மச்சு விழி மையழகே..!
நீ ...மனைந்து வைத்த
மாயம் என்ன...?

குச்சுக் கோபுரங்கள்
குடைவிரியும்
பேரழகே!....உன்னைப்
பறவைகள் போல்
மேலிருந்து பார்த்தவர்கள்
மாய்வதென்ன..!

நரையோடிப் புரையோடி,
பிணி சுமந்து மூப்புண்டோர் ,
பல்லோர்க்கும் உணவூட்டி,
மருந்தூட்டிப் பிணியகற்றி,
மனதோடு உறவாடி,மகிழ்வூட்டி
பணி சுமக்கும் மருத்துவச்சி நீ.....!

வாஞ்சை கொண்ட,
நெஞ்சமெல்லாம் ,
வனப்பதில் காத்திருக்க,
எங்கிருந்தோ வந்து சேர்ந்த ...

சொந்தமில்லா ..சொந்தமெல்லாம்,
பந்தம் கொள்ள வந்தார்கள் .
பாசக்கயிறு கொண்டே,
நேசம் சொல்லி வந்தார்கள் .

கட்டுண்ட சொந்தத்திலும்,
ஒட்டுண்டு போகாமல்,
பாங்குடனே மணமறுத்து
நீயும் கொண்ட (மருத்துவ) சேவை
மாறவில்லை.

அன்பு கொண்ட நெஞ்சங்களை,
ஆவல் கொண்ட சொந்தங்களை ,
பாசத்தாலே முடிந்து வைத்து ,
வெள்ளங்கி சேவைதனை ,
விருப்புடனே மாலையிட்டாய்.

'அன்பினுக் கோர் அடைக்குந்தாள்'
உண்டுதானா..?
(திருமணம் மறுத்துவிட்டு சேவையிலே
தோய்ந்து விட்ட பெண் மருத்துவருக்கு ...சமர்ப்பணம் ...)

எழுதியவர் : minkavi (16-Feb-13, 9:12 pm)
பார்வை : 254

மேலே