நம் தேர்வு
நம் தேர்வு
***************
வாக்குரிமை...
சாதிக்காக...
மதத்துக்காக...
உள்ளூர்க்காக...
உறவுக்காக...
கட்சிக்காக...
காசுக்காக...
திரைப்படத்தின்
கவர்ச்சிக்காகப்
போட்டுப் போட்டு
நாட்டைக் கெடுக்கும்
உரிமை நமக்கே
உரியதானது....!
நன்றாய், நாமம்
நமது நெற்றியில்
என்றும் போடும்
அந்த உரிமை...
வென்றவர், தமக்கே
உரியதானது...!
வறட்சி இருக்கும்
இடமெல்லாம்...
பஞ்சப் பகுதியாய்
அறிவித்தார்கள்.
அரசியல் இருக்கும்
இடமெல்லாம்....
லஞ்சப்பகுதியாய்
அறிவித்தாலென்ன..?
காந்திக்கண்ட
ராமராஜ்ஜியத்தில்
இன்று,
தரவரிசைபெறமுடியாத
பூஜ்ஜியங்களே...ஏராளம்!
கவியரசுவின் வைரவரிகளே...
இன்று சாட்சிகளாய்...
"அவன்
ஒரு பட்டு வேட்டி பற்றிய
கனாவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது."
இனிவரும்..,
இளைய சமுதாயத்தின்
ஏற்றம் தரும் வளமை..
சிந்தனையே...!
இந்திய நாட்டில்
பட்டொளி வீசும்.....!

